in

சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இஸ்லாமியர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது


Watch – YouTube Click

பழனியருகே கோயில் விழாவில் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இஸ்லாமியர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில்‌ ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் உள்ள பட்டாளத்தம்மன் திருக்கோயிலில் ஆனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று அருள்மிகு பட்டாளம்மன் திருக்கோவில் பக்தர்களுக்கும் ஆயக்குடி காயிதே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அமைப்பின் சார்பில் திருக்கோயில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக திருக்கோயிலுக்கு வருகைதந்த காயிதே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அமைப்பின் நிறுவனர் அஜ்மத்அலி தலைமையிலான இஸ்லாமியர்களுக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை நிறைவுபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இஸ்லாமியர்கள் அன்னதானம் செய்ய முன்னுற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதான உணவு அருந்தினர். சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் இந்து சமய கோயில் திருவிழாவில் இஸ்லாமியர்கள் பங்கேற்று அன்னதானம் வழங்கியது வரவேற்பை பெற்றது. ஆயக்குடி பேரூராட்சி தலைவர் மேனகா, பேரூர் செயலாளர் சின்னத்துரை மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


Watch – YouTube Click

What do you think?

ஓஎன்ஜிசி எரிவாயுக் கசிவை சரிசெய்வதற்கான பராமரிப்புப்பணி இன்று தொடங்கியது

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வெங்கடேசபுரத்தில் சாலை ஓர கால்வாயில் கவிழ்ந்த மினி பேருந்து