in

தர்மபுரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் சீர்வரிசை கொண்டு வந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தர்மபுரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் சீர்வரிசை கொண்டு வந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 

தேனி அருகே தர்மபுரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் சீர்வரிசை கொண்டு வந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது
தேனி அருகே தர்மபுரியில் கிருஷ்ணா வித்யாலயம் துவக்கப்பள்ளியில் 1943 – 2025 ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு விழா 83 ஆம் ஆண்டு அமுதப் பெருவிழா நடைபெற்றது.இந்த விழாவில் முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் பரிசு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் அனைவருக்கும் கௌரிக்கப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்களுக்கும் கெளரவம் செய்யப்பட்டது..பள்ளி மாணவர்கள் பட்டு ஆடை அணிந்து அம்மன் பாடல்களுக்கு நடனமாடியும் பல்வேறு பாடல்களுக்கும் மாணவ மாணவிகள் சிறப்பான முறையில் நடனம் ஆடியதை பார்த்து பொதுமக்களுடையே வியப்பில் ஆழ்த்தியது .

தொடர்ந்து கல்வி பற்றிய நகைச்சுவை பட்டிமன்றத்திலும் மாணவர்கள் நடித்து தங்கள் திறமைகளை நிருபித்து காட்டினார்கள். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் முன்னாள் மாணவர்கள் சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னாள் ராணுவத்தினர் இந்நாள் ராணுவத்தினர் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர் முன்னதாக முன்னாள் மாணவர்கள் சீர்வரிசை கொண்டு வரும் நிகழ்ச்சியில் சிறப்பான முறையில் தர்மபுரி கிராமத்தின் மையப் பகுதியில் இருந்து பள்ளி மைதானத்திற்கு மாணவர் சார்பில் அழைத்துவரப்பட்டனர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் ஆண்டு விழாவிற்காக முன்னாள் மாணவர்கள் சார்பில் அறுசுவை உணவு, குடி தண்ணீர், பிஸ்கேட், மேடை அலங்காரம்.

ரேடியோஸ், மின் விளக்குகள், வானவேடிக்கை, டிரம் செட், டேபிள் சேர்.
மாணவர்களுக்கு பரிசு பொருட்கள், விளையாட்டு பொருட்கள், சால்வை மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் என பரிசுப் பொருட்கள் முன்னாள் மாணவர்கள் சார்பாக வழங்கப்பட்டது.

What do you think?

வனதுர்க்கை அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை ராகுகால பூஜை

கடலை விவசாயம் முதல் செக்கில் எண்ணெய் ஆடி விற்பனை