விஷாலின் உடல்பாதிப்பிற்கு நான் காரணமா ?
மகத ராஜா pre..event நிகழ்ச்சியில் விஷாலின் நிலைமையை பார்த்து பலர் அதிர்ந்து விட்டனர். இரண்டு வாரங்களாக அவர் உடல்நிலை பாதிப்புக்கான பல காரணங்களை ஊடகங்கள் வெளியிட்ட நிலையில், நடிகர் விஷாலின் உடல்நலப் பிரச்சினைகளை ‘அவன் இவன்’ படத்தின் கதாபாத்திரத்துடன் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இயக்குனர் பாலா தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
வணங்கான் படத்திற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வின் போது”விஷாலின் உடல்நலப் பிரச்சினைகள் ‘அவன் இவன்’ படத்தில் நான் அவருக்கு வழங்கிய கதாபாத்திரத்தால் ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை, எனது படத்தில் வன்முறைகள் அதிகமாக இருப்பதாகவும் சோகங்கள் நிறைந்திருப்பதாக பேசுகிறார்கள் , வணங்கான் கதை நிஜமாகவே சென்னையில் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்வு…
இதுபோன்ற கொடூரமான செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.” மேலும் நான் அவரது கண்ணை தைத்து விட்டதாக கூறியுள்ளனர். நான் அப்படி எதுவும் செய்யவில்லை, சிலர் தங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்கிறார்கள். இதுபோன்ற அடிப்படையற்ற கருத்துகளை நான் பொருட்படுத்துவதில்லை” என்று பாலா கூறினார்.