in ,

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த தேரழுந்தூரில் அமைந்துள்ள ஆமருவியப்பன் ஆலய தெப்போற்சவம்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த தேரழுந்தூரில் அமைந்துள்ள ஆமருவியப்பன் ஆலய தெப்போற்சவம்

 

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த தேரழுந்தூரில் அமைந்துள்ள ஆமருவியப்பன் ஆலய தெப்போற்சவம் திரளான பக்தர்கள் வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் அமைந்துள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த இந்த ஊரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ஆமருவியப்பன் ஆலயம் அமைந்துள்ளது.

108 வைணவ திவ்ய தேசங்களுல், 23வது தேசமான இங்கு மூலவர் தேவாதிராஜன் 13அடி உயர சாளக்கிராம கல்லிலால் ஆனவர்.

ஆழ்வார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில், பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருமாள் சர்வ அலங்காரத்தில் ஆலய தீர்த்த குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார்.

பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீபாரதனைக்கு பிறகு தெப்பம் குளத்தில் ஐந்து முறை வலம் வந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்ற கோஷம் இட்டு வழிபாடு செய்தனர்.

What do you think?

வண்டியூர் கண்மாய் வரத்து கால்வாய் ஆகிய இடங்களில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு

மகளிர் உரிமைத் துறை சார்பாக பெண்களுக்கான கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தன்னம்பிக்கை பேச்சு