புதுச்சேரி…கொரோனா தடுப்பூசியை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து150 நாடுகளுக்கு கொடுத்தோம்..இது தான் பார்த் சக்தி.இதை பலமாக்குவது நமது கடமை.தமிழக ஆளுநர் R.N.ரவி பேச்சு.
மோத்வானி ஜடேஜா அறக்கட்டளை சார்பில் பாண்டி லைட் பெஸ்ட் (PLF) எனப்படும் இலக்கிய திருவிழா கடற்கரை சாலையில் உள்ள அரபிந்தோ சொசைட்டி அரங்கில் 3 நாட்கள் நடக்கிறது.இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குத்து விளகேற்றி துவக்கி வைத்தார்.தொடர்ந்து அவர் பார்த் சக்தி என்ற தலைப்பில் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர்,பாரதம் என்பது தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
அரசியலை நிலையில் பாரதத்தை பார்க்க கூடாது.பார்த் சக்தி என்பது உயர்த்தி பிடிக்கப்பட வேண்டும்.விடுதலை பெற்ற போது நாடு பிரிந்து கிடந்தது.அரவிந்தர் அதை விரும்பவில்லை..பாரதம் உருவாக்க வேண்டும் என்றார்.விடுதலைக்கு பிறகு பாரத் சக்தியை பலப்படுத்தப்படவில்லை.
மகான் அரவிந்தரின் கனவை நிறைவேற்றுவது தான் நமது கடமை .மனித நேயத்திற்கு சொந்தமானவர்.அரவிந்தரின் கனவு நினைவாக பாரத் சக்திகள் ஒன்றிணைய வேண்டும்..அரவிந்தர் தப்பித்து வரவில்லை.அவர் புரட்சியாளர் விடுதலைக்கு தனி இயக்கம் என உருவாகாத போது அவர் மக்களிடம் சுதந்திர தியாகம் ஊட்டினார்.அப்போதெல்லாம் மகாத்மா காந்தி முன்னெடுப்பில் இல்லை.
தமிழகத்தில் விடுதலை வேட்கையை வஉசி முன் எடுத்து சென்றார்.
அரவிந்தரின் கனவு சர்வதேச சகோதரத்துவம் தேவை.இதற்கு பாரத் சக்தி தேவை.
வேத காலத்தில் நமது ரிஷிகள் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளனர்.மக்கள் பல மொழி,மதம்,உணவு என இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை அவசியம்.இது உலகம் முழுவதும் பரவ வேண்டும் என ஆளுநர் கூறினார்.
அரசியல் நிலையில் பாரத்தை புரிந்து கொள்ள கூடாது.பார்தம் என்பது
ராஷ்ட்டிரம் என கூறிய ஆளுநர் ரவி,விடுதலை பெற்ற போது நாடு பிரிந்து கிடந்தது.அரவிந்தர் அதை விரும்பவில்லை என்றும் ஆன்மீக தலைவர்களின் சிலை,கோயில்களை எழுப்புவது மூலம் பாரத் சக்தியை மேம்படுத்த முடியும்..நண்பனையும் எதிரையும் அடையாளம் காணாமல் பாரத் சக்தியை உயர முடியாது என்றார்.
கடந்த பத்து ஆண்டுகளில் நாடு அடைந்த பொருளாதார முன்னேற்றத்தை ஒட்டுமொத்த உலகமும் அங்கீகரித்துள்ளது.நாம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சூழலில் உள்ளோம். உலகமே நம் நாட்டின் திறனை ஒப்புக்கொண்டுள்ளது. பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திலும் நாடு முன்னேறியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த சாதனைகள் அனைத்தும் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் பங்களிப்பால் சாத்தியமாகியுள்ளன. நாட்டின் தலைமை தடைகளை நீக்கி, மக்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.பொருளாதார முன்னணியில் பாரத்தின் எழுச்சியுடன், நாடு ஆன்மீக விழிப்புணர்வைக் காண்கிறது.இது நாட்டின் முக்கிய பலமாகும்.நாட்டின் தனித்துவமான ஆன்மீகக் கருத்தை அழிக்க கடந்த காலங்களில் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிந்தைய விவகாரங்களின் தலைமைக்கு வந்தவர்களும் பாரத சக்தியைக் குழிதோண்டிப் புதைக்க முயன்றனர். நாம் நமது தனித்துவமான ஆன்மீக வலிமையை மீட்டெடுக்கிறோம்,இதற்கான தெய்வீக கடமை எங்களுக்கு உள்ளது.
எவ்வாறாயினும், கடந்த 10 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாதவர்கள் இங்கும் உள்ளனர் என ஆளுநர் ரவி என்றார்.
மதச்சார்பின்மையின் ஐரோப்பிய வடிவத்தை நிராகரிக்க வேண்டியது அவசியமாகும். அனைவருக்கும் சமமான மரியாதை அளிக்கும் மதச்சார்பின்மையை நாம் ஊக்குவிக்க வேண்டும். சமூக மற்றும் சாதி மோதலை ஊக்குவிக்கும் அரசியல் சித்தாந்தத்தையும் நாம் கைவிட வேண்டும்,” என்றும் R.N. ரவி கூறினார்.
கொரோனா வந்த போது உலகமே தடுப்பூசிக்கு தேடிய போது நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.150 நாடுகளுக்கு நாம் கொடுத்தோம்..இது தான் பார்த் சக்தி..இதை பலப்படுத்த வேண்டியது நமது கடமை என
தமிழக ஆளுநர் R.N.ரவி வலியுறுத்தினார்.