in

மின் கட்டண உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாகையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு பொறுப்பேற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது இதனால் ஏழை எளிய பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைக் கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டம் அபிராமி அம்மன் திருவாசலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட கழக அவைத்தலைவர் கருணைநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் நகர மன்ற தலைவரும் மாவட்ட செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன், நாகை நகர கழக செயலாளர் உலகநாதன், நாகை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரகுமான் ஷரீப் திருமருகல் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முகமது பக்ருதீன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்

What do you think?

நாகை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் பொறுப்பேற்பு

நாகை அருகே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு 300 க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்