அம்மா அவர்கள் விதி எண் 110ன் கீழ் கதவணைப் பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு – விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தொலைநோக்கு பார்வையுடன் மறைந்த முதலமைச்சர் மாண்புமிகு அம்மா அவர்கள் விதி எண் 110ன் கீழ் கொண்டு வந்த 463 கோடி ரூபாய் மதிப்பிலான கதவணைப் பணிகள் 95 சதவீதம் நிறைவு மாவட்ட ஆட்சியர் ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை:-
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் குமாரமங்கலம் என்ற இடத்தில் 463 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான கதவணை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. திருச்சியில் காவிரி ஆற்றில் பிரியும் கொள்ளிடம் ஆறானது, திருச்சி தஞ்சை நாகை மயிலாடுதுறை கடலூர் அரியலூர் பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்கிறது. கொள்ளிடம் ஆறு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காட்டூர் என்ற இடத்தில் கடலில் கலக்கின்றது. கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்தி உபயோகப்படுத்தவும்கடல் நீர் உட்புகாமல் தவிர்க்கவும் மயிலாடுதுறை மாவட்டம் ஆதனூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்கப்படும் என்று தொலைநோக்கு பார்வையுடன் 2014ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மறைந்த மாண்புமிகு அம்மா அவர்கள் அவர்கள் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு 463 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணி துவங்கியது தற்பொழுது 95 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் இறுதி கட்டப் பணிகள் மிகவும் காலதாமதமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது இந்நிலையில் இந்த பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று நேரில் ஆய்வு செய்தார் பணிகள் நிறைவடைந்த பின்பு குடிநீர் திட்டங்களுக்கு தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைக்கும் என்றும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.