தொங்கு பாலத்தில் தொங்கி கொண்டு மோதிரம் மாற்றிய எமி ஜாக்சன்… விரைவில் திருமணம்.
தமிழில் பா. விஜயின் இயக்கத்தில் வெளியான ‘மதராசபட்டினம்’ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன்.
அதை தொடர்ந்து இவர் தங்கமகன், கெத்து, தெறி ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார்.
சமீபத்தில் அருண் விஜய் உடன் இவர் இணைந்து நடித்த ‘மிஷன் சாப்டர் ஒன் படம்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
எமி ஜாக்சன் ஏற்கனவே இங்கிலாந்து தொழிலதிபர் George Panayiotou வை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு குழந்தைக்கு தாயானார் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
அதன் பிறகு இங்கிலாந்து நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து டேட்டிங் செய்து வருகிறார். இரண்டு ஆண்டுகள் காதலித்த பின் இருவரும் தற்பொழுது திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்திற்கு வந்திருக்கிறார்கள்.
அழகான இந்த நடிகைக்கு தனது கனவு காதலுடன் சுவிட்சர்லாந்தின் பனி பொழிவுக்கிடையில் பிக் வாக் கொங்கு பாலத்தில் மோதிரம் மாற்றி அவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொங்கு பாலத்தில் மோதிரம் மாற்றிக் கொண்டாலும் வாழ்க்கையை தொங்கவிடாமல் எமி ஜாக்சன் பார்த்துக் கொண்டால் நல்லது.