செம்பு கிரீடத்தை தங்க கிரீடம் என்று பொய் சொல்லி காணிக்கை கொடுத்த நடிகர்
மலையாள நடிகர் சுரேஷ் கோபி அவர்கள் தமிழில் பல படங்கள் நடித்துள்ளார்.
குறிப்பாக கற்பூர முல்லை, தினா, சமஸ்தானம் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
இவர் தற்பொழுது திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதாக கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.
அண்மையில் சுரேஷ் கோபியின் மகள் பாக்கியாவுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் உள்ள லூர்து மாதா தேவாலயத்தில் மேரி மாதாவிற்கு தங்க கிரீடம் வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகள் ராதிகாவுடன் சென்று தங்க கிரீடத்தை மேரி மாதாவிற்கு காணிக்கையாக செலுத்தினார். தற்பொழுது அது தங்க கிரீடம் அல்ல செம்பு பூசப்பட்ட கிரீடம் என்ற சர்ச்சையை காங்கிரஸ் கிளப்பியுள்ளது.
கிரீடத்தில் பயன்படுத்திய தங்கம் மற்றும் செம்பு வின் அளவை கணக்கிடுமாறு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. கிறிஸ்தவர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே சுரேஷ் காபி அவ்கிரிடத்தை தங்க கிரீடம் என்று பொய் சொல்லி வழங்கி இருக்கிறார் என்ற சர்ச்சை மக்களிடையே ஆவேசத்தை ஏற்படுத்தி இருக்கிறது.