தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி குறித்து மறுப்பு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அனைவரும் விருப்பமும் ஆசையும் படுவதாக தென்காசியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வருகை தந்தார். இதில் ஆயிரப்பேரி கிராமத்தில் காங்கிரஸ் கிராம கமிட்டி நடைபெற்ற நிலையில் அங்கு நிர்வாகிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில்,
தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அனைவரும் விருப்பப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது இந்தியா கூட்டணி ஒற்றுமையுடனும் வலிமையாக உள்ளது. இனிவரும் காலங்களிலும் காங்கிரஸ் கட்சி எங்கு உள்ளது அந்த இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
மேலும் அவர் கூறுகையில் நடிகை கஸ்தூரி விவகாரத்தில் ஆதாரங்கள் முறையாகவும் இருந்த காரணத்தினால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், நெல்லை காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜெயக்குமார் படுகொலை செய்த வழக்கில் சிசிடிவி காட்சிகள் மற்றும் யார் கொலை செய்தார் என்பது குறித்தான எந்தவித தடயங்களும் கிடைக்கவில்லை இந்த காரணங்களினால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது காவல்துறைக்கு சவாலாக உள்ளது என கூறினார்.
ஆசிரியர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் முதல்வருக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.