ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை யொட்டி அலகு குத்தி தேர் இழுத்து வந்த ஐயப்ப பக்தர்
வத்தலகுண்டு கலியுக வரதன் ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை யொட்டி அலகு குத்தி தேர் இழுத்து வந்த ஐயப்ப பக்தர்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஸ்ரீ கலியுக வரத ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக அழகு குத்தி ஐயப்பன் தேர் இழுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்கு 18 வருடங்கள் சபரிமலை யாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்களின் பெயர்களில் சன்னதியில் நடந்த குலுக்கல் முறை அடிப்படையில் ஒரு ஐயப்ப பக்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மஞ்சள் ஆற்று கரையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐயப்ப பக்தருக்கு அழகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உடல் முழுவதும் அழகு குத்திக் கொண்ட ஐயப்ப பக்தர் முதுகில் குத்தப்பட்ட அழகால் ஐயப்பன் உருவப் படத்துடன் கொண்ட மலரால் அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்து வந்தார்.
ஏழு கன்னிமார் சாமிகள் வழி நடத்த இந்த தேர் ஊர்வலம் வத்தலக்குண்டு முக்கிய வீதிகளில் நடைபெற்றது.
இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று சரண கோஷங்களை எழுப்பினர்.