in

புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (29.06.2024) | இன்றைய முக்கிய செய்திகள்


Watch – YouTube Click

புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (29.06.2024) | இன்றைய முக்கிய செய்திகள்

 

புத்தக பையில்லா தினம்.. இயற்பியலோடு விளையாட்டு.. புதுச்சேரி அரசு பள்ளியில் மாணவ-மாணவியர் அசத்தல்

புதுச்சேரியில் மாதத்தின் கடைசி நாளை புத்தகப்பை இல்லாத நாளாக கல்வித்துறை கடைபிடிக்கிறது. அந்த வகையில் பள்ளிகளுக்கு இன்று மாதத்தின் கடைசி நாள்.

இதனையொட்டி முத்திரையர்பாளையத்தில் இயங்கி வரும் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலை பள்ளியில் புத்தக பை இல்லா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

கால்பந்து, கிரிக்கெட், தடகள போட்டிகள், ஈட்டி எறிதல், பளு துõக்குதல், கேரம் போன்ற விளையாட்டுகளில் வெற்றிபெற இயற்பியலின் பங்கு என்ன? என மாணவர்களுக்கு மைதானத்திலும், வகுப்பறையிலும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

சுழற்பந்தும், வெற்றியும் என்ற தலைப்பில் அனிமேஷன் காட்சி மூலம் 12ம் வகுப்பு மாணவி காவியா செயல் விளக்கம் அளித்தார். மாணவர்கள் கிஷோர், வாகீசன் ஆகியோர் கால்பந்து விளைவுகள், கிரிக்கெட் சுழல்பந்து குறித்து மாதவன், பரமேஸ்வரன் ஆகியோர் மைதானத்தில் செயல்விளக்கம் அளித்தனர்.

மாணவி அபர்ணா பளுதூக்குதலில் நியூட்டன் விதிகள் குறித்தும், மாணவர் ராஜாராம் ஈட்டி எறிதல் குறித்தும், மாணவி சத்யபிரியா, மாணவர்கள் முனுஷந்தன், ஆகாஷ், ஓட்டத்திறன் குறித்தும் விளக்கினர். கேரம் விளையாட்டு இயற்பியல் விதிகளை மாணவி சுஸ்மிதா விளக்கினார்.

படிப்பில் சற்று ஆர்வம் குறைவான மாணவர்கள், விளையாட்டில் ஆர்வமாக உள்ளனர். படிப்பில் ஆர்வமாக உள்ளவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் பள்ளி ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், நுண்கலை ஆசிரியர்கள், மாணவர்களோடு இணைந்து இயற்பியலையும், விளையாட்டையும் ஒருங்கிணைத்தனர்.

இது மாணவர்களிடையே நல்ல பலன் கிடைத்துள்ளது. மாணவர்கள் கவனம் சிறதாமல் படிப்பதிலும், விளையாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநிலம், தேசிய அளவிலான போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெறும் இலக்கோடு செயல்பட்டு வருகிறோம் என இயற்பியல் ஆசிரியர் ஸ்ரீராம், தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள்,
இயற்பியல் ஆசிரியர் ஸ்ரீராம், உடல்கல்வி ஆசிரியர்கள் சக்திவேல், கலியுவராஜா, நுண்கலை ஆசிரியர் இளமுருகன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

புதுச்சேரி பழைய துறைமுகத்தில் இருந்து சுப்பையா சாலை முழுவதும் சாலையின் இரு புறங்களிலும் போக்குவரத்துக்கு இடையூராக இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்

புதுச்சேரி நகரப் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

அதன் படி புதுச்சேரி பழைய துறைமுகத்திலிருந்து சோனாம்பாளையம் நான்கு முனை சந்திப்பு வரை சுப்பையா சாலையின் இரு புறங்களிலும் உள்ள கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு விபத்து ஏற்படுவதாக புகார் வந்தது.

இதனை அடுத்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுப்பணித்துறை சார்பில் அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால் இது நாள் வரை கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதனை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் சாலைகளின் இரு புறங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

இதற்கு ஒரு சில கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் உடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

மேலும் தொடர்ந்து புதுச்சேரி முழுவதும் சாலைகளின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது என்றும் தொடர்ந்து போக்குவரத்து இடையூறாக கடைகள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தினர்.

புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை பயிற்சி இயக்குரைகம் மூலம் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஐடிஐ மூலம் பல்வேறு தொழிற்பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

புதுவை. காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒரு வருட இரண்டு வருட பயிற்சி பிரிவுகளில் சேர்ந்து படிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இம்மாதம் (ஜுனி 30-ந்தேதியோடு முடிவடைகிறது.பயிற்சியில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் https://centacpuducherry.in/ அல்லது https://labour.py.gov.in/ இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சென்டாக் இணையதளத்தில் பதிவு செய்ய கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்கான தொழிற்பயிற்சி பிரிவுகளிலும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்குரிய தொழிற்பயிற்சி பிரிவுகளிலும் அளைத்து தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். உடனடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடிய இந்த தொழிற்பயிற்சி பிரிவுகளில் சேருவதற்காக அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் அனைவருக்கும் பயிற்சியின்போது ஒவ்வொரு மாதமும் ரூ1,000 உதவித்தொகை வழங்கப்படும் பயிற்சியில் சேரும் அனைவருக்கும் மதிய உணவு, பாடப்புத்தகம், சீருடை இலவசமாக வழங்கப்படும்.

புதுவையில் மேட்டுப்பாளையம், வம்பாகீரப்பாளையம், வில்லியனூர், பாகூர், நெட்டப்பாக்கம், காரைக்கால், மாசி மற்றும் ஏனாம் பகுதிகளில் அரசு ஐடிஐ நிலையங்கள் உள்ளது. இங்கு கம்ப்யூட்டர். எலக்ட்ரீசியன் பிட்டர், சிவில், ஏ.சி டெக்னீஷியன் மோட்டார் வாகன மெக்கானிக் எலக்ட்ரானிக்ஸ், வயர்மேன், பிளாஸ்டிக் செயல்முறை இயக்குபவர், கட்டடம் கட்டுபவர். தையல்கலை அழகுக்கலை. வெல்டர், டர்னர், ட்ரோன் டெக்னீஷியன், மின்சார வாகன மெக்கானிக், சோலார் டெக்னீஷியன் உணவு மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. சென்டாக் இணையதளம் மூலம் பதிவு செய்ய 30.06.2024 அன்று கடசி நாள் ஆகும்.

முத்தியால்பேட்டையில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 லட்சத்திற்கான காசோலையை சிறுமியின் பெற்றோரிடம், முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த செல்வி ஆர்த்தியின் பெற்றோரிடம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இறப்புக்கான முதல் தவணையான 50% நிதியாகிய ரூ 4,12,500/- மற்றும் புதுவை அரசின் கூடுதல் நிவாரணமான ரூ.3,00,000/– ஆக மொத்தம் ரூ.7,12,500/- நிதிக்கான ஆணையினை முதலமைச்சர் ரங்கசாமி கடந்த மார்ச் மாதம் வழங்கினார்.

இதுதவிர, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் எதிர்பாராத விபத்தில் இறக்கும் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.10 இலட்சம் இழப்பீட்டுத் தொகையாக முதலமைச்சர் ரங்கசாமி , ஆர்த்தியின் பெற்றோரிடம் கடந்த கடந்த 11 ஆம் தேதி வழங்கினார்.

மேலும், முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்தபடி, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 இலட்சத்திற்கான காசோலையினை சிறுமி ஆர்த்தியின் பெற்றோரிடம் முதல்வர் ரங்கசாமி இன்று வழங்கினார்.இந்நிகழ்ச்சியின் போது, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் உடனிருந்தார்.

குடியிருப்பு மத்தியில் இருக்கும் சாராயக்கடையை அகற்றக்கோரி குருமாம்பேட் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு.

புதுச்சேரி குருமாம்பேட் சிவசக்தி நகர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளது. குடியிருப்பு மத்தியில் தனியாருக்கு சொந்தமான சாராயக்கடை உள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

சாராயக்கடைக்கு குடிக்க வரும் நபர்கள் குடித்துவிட்டு இங்கு இருக்கும் வீதிகளில் துணிகள் இன்றி படுத்து தூங்குவதாகவும் அதேபோல் இரவு நேரங்களில் குடியிருப்பு வாசிகளை கதவுகளை தட்டி எழுப்பி தங்களுக்கு உணவு, தண்ணீர் கொடுக்கும் வேண்டும் என தொந்தரவு கொடுத்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்..

இதனால் மூன்று வருடங்களாக முதலமைச்சர் தலைமை செயலர் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனுக்களை கொடுத்து வந்துள்ளனர்.. ஆனால் இதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததால் தற்பொழுது நாளை சாராயக்கடத்திற்கான ஏலம் விடப்பட உள்ளது இதனை முன்னிட்டு குடியிருப்பு வாசிகள் தொடர்ந்து முதலமைச்சர் அமைச்சர் தலைமை செயலகம் மீண்டும் மனுக்கள் கொடுத்துள்ளனர்..

இதனிடையே சாராயக் கடையை அப்புறப்படுத்த வேண்டும். நாளை நடைபெறும் ஏலத்தில் இந்த பகுதியில் இருக்கும் சாரா கடையை ஏலத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது உடனடியாக இங்கு உள்ள சாராயக்கடையை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் அங்கு வசிக்கும் மக்கள் கருப்பு கொடிகளை கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்… அப்படி தங்கள் கோரிக்கை ஏற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாளை மிகப் பெரிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுவோம் என தெரிவித்தனர்…

கள்ளக்குறிச்சியில் விஷ சாரயாம் அருந்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 19ந்தேதி கள்ளத்தனமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை அருந்தி 229 பாதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட 20 பேரில் ஏற்கனவே 6 பேர் உயிரிழந்த நிலையில், 6 குணமடைந்து வீடு திரும்பினர், 8 பேர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கருணாபுரத்தை சேர்ந்த பெரியசாமி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதனைத்தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மரில் உயிரிழப்பு 7 ஆகவும், ஆக மொத்தமாக பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் என அனைத்து மருத்துவமனைகளிலும் 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

ஜிப்மரில் சிகிச்சையில் உள்ள 7 பேருக்கி சிகிச்சையில் முன்னேற்றம் இருப்பதாக ஜிப்மர் தெரிவித்துள்ளது.

 


Watch – YouTube Click

What do you think?

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (28.06.2024)

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலி