இன்றைய முக்கிய செய்திகள் | புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (02.07.2024)
புதுச்சேரி வனம் வனவிலங்கு துறை சார்பில் 10000 மரக்கன்றுகள் 108 கிராமங்களிலும் நடுவதற்கான விழாவினை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வனத்துறை சார்பாக மரங்களின் முக்கியத்துவம் மற்றும் அதனை பாதுகாத்தலில் மக்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் வாரத்தில் மரக்கன்று நடும் திருவிழா கொண்டாடப்படுகிறது இந்நிகழ்ச்சியினை வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலையில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டசபை வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்து .நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் எம்பி செல்வகணபதி அரசு கொரடா ஆறுமுகம் எம்எல்ஏக்கள் ரமேஷ் லஷ்மிகாந்தன் மற்றும் வனத்துறை செயலாளர் ஜவகர்,வன பாதுகாவலர் அருள்ராஜன், அவர்கள் முன்னிலையில் 10,000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியின் வேளாண் துறை, காவல்துறை, நீதித்துறை, உள்ளிட்ட அரசு துறைகள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மரக் கன்றுகள் நடுதல், மேலும் புதுச்சேரியில் உள்ள 108 கிராமங்களிலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இந்து மக்களை அவமதித்து பேசிய ராகுல்காந்தியை கண்டித்து புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ சட்டமன்ற வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
பாராளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பாராளுமன்ற எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி உரையாற்றியபோது இந்துக்களை வன்முறையாளர்கள் என பேசியதற்கு அவையில் பிரதமர் மோடி, அமீத்ஷா உள்ளிட்ட பாஜகவினர் ராகுல்காந்தியை மன்னிப்பு கோர வலியுறுத்தினர். இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில்.
புதுச்சேரி பாஜக ஆதரவு எம்.எல்.ஏ அசோக்பாபு இந்துக்களை அவமதித்த ராகுல்காந்தியை கண்டித்து புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் தரையில் அமர்ந்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் பேரவை செயலர் பேச்சுவார்த்தை நடத்தினார் இருப்பினும் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.இந்த நிலையில் சட்டமன்றத்திற்கு வந்த சபாநாயகர் செல்வம், பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அசோக் பாபு எம்எல்ஏ போராட்டத்தை கைவிட்டார்.பாஜக எம்எல்ஏவின் திடீர் போராட்டத்தால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி ஊர்க்காவல் படை வீரர்கள் சேர்க்கைக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களை திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் காவல் நிலையம் வரவழைத்து சால்வை அணிவித்து கௌரவப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
புதுச்சேரியில் ஊர்க்காவல் படை வீரர்கள் சேர்க்கைக்கான எழுத்துத் தேர்வு கடந்த 30ஆம் தேதி நடைபெற்றது இதில் உடல் தகுதி தேர்வில் தேர்வான 4000க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.
அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் திருக்கனூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கிராமங்களை சார்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேர்வாகினர்.
இதையடுத்து ஊர் காவல் படை வீரருக்கு தேர்வான இளைஞர்களை திருக்கனூர் போலீசார் ஸ்டேஷன் அழைத்து பாராட்டினர். அப்பொழுது இன்ஸ்பெக்டர் ராஜகுமார் எழுத்து தேர்வில் தேர்வாகியுள்ள இளைஞர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி கவுரவித்தார்.இதில் போலீசார் மத்தியில் தேர்வான மாணவர்கள் பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து காலில் விழுந்து ஆசி பெற்றனர்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அனைவராலும் பாராட்டக்கூடியதாக பரவி வருகிறது இதில் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
பெரியாண்டவர் வீர சிலம்பாட்டம், நாடக குலைக்குழு மற்றும் புதுச்சேரி வீர சிலம்பாட்டம் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி, பெரியாண்டவர் வீர சிலம்பாட்டம், நாடக குலைக்குழு மற்றும் புதுச்சேரி வீர சிலம்பாட்டம் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் இணைந்து உஷா சிலம்பம் வெற்றிக் கோப்பைக்கான போட்டி அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. செயலாளர் கோபால்சாமி வரவேற்றார். உஷா சிலம்பாட்ட மேளாலர் வடிவேலன் பெருமாள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சபாநாயகர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிலம்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் புதுச்சேரியில் இருந்து 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். 5 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.