in

மதுரையில் பழுதாகி நின்ற மாநகர பேருந்தை பள்ளி மாணவர்கள் உதவியுடன் ஓராம்கட்டிய சம்பவம்

மதுரையில் பழுதாகி நின்ற மாநகர பேருந்தை பள்ளி மாணவர்கள் உதவியுடன் ஓராம்கட்டிய சம்பவம்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி செல்லக்கூடிய மாநகர் அரசு பேருந்து திடீரென பழுது ஏற்பட்டதால் சாலையின் நடுவே நின்றது.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்து நிறைந்த கிரைம் பிராஞ் பகுதியில் பேருந்து நின்றதால் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் உதவியுடன் பேருந்தை சாலையின் ஓரத்திற்கு தள்ளி கொண்டு சென்று நிறுத்தினர். அதனை தொடர்ந்து பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து பள்ளிக்கு மாணவர்கள் தாமதமாக செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் மாநகரப் பேருந்து பெரும்பாலானவை பழுதாகி இருப்பதால் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

What do you think?

நாகை வேதாரண்யம் ஸ்ரீ வேம்படி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடைபெற்றது.

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் மஹாலில் அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக ஆலோசனை கூட்டம் ராஜன் செல்லப்பா தொண்டர்களிடம் உரையாற்றினார்.