கஞ்சா வைத்து அடித்து கொண்டிருந்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து உட்கார வைத்த சம்பவம்
திருச்சி பிராட்டியூர் விநாயகர் கோயில் அருகே புளியமரத்தடியில் 2 ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தில் 2 மர்ம நபர்கள் கஞ்சா புகைத்து கொண்டு இருந்தனர்.
இதை பார்த்த இளைஞர்கள் அந்த நபர்களை பிடித்து விசாரித்து கொண்டிருந்தனர். பிடிபட்டவர்கள் அந்த இளைஞர்களிடம் நாங்கள் பெரம்பலூரை சேர்ந்த விக்னேஷ், வேல்முருகன் என்றும், கஞ்சா வாங்குவதற்காக இங்கு காத்திருக்கிறோம் என்றனர்.
பின்னர் இளைஞர்கள் மத்தியில் விக்னேஷ் என்பவர் கஞ்சா கேட்டு பெண் கஞ்சா வியாபாரியிடம் போனில் பேசினார்.
சிறிது நேரத்தில் பெண் கஞ்சா வியாபாரி ஆறுமுகம் என்பவரிடம் கஞ்சாவை கொடுத்து அனுப்பினார். புங்கனூர் சாலையில் கஞ்சா வாங்குவதற்காக விக்னேஷ் காத்திருந்தார்.
அப்போது ஆறுமுகம் புல்லட்டில் கஞ்சாவை கொண்டு வந்தார். மறைந்திருந்த இளைஞர்கள் கஞ்சா வியாபாரி ஆறுமுகத்தை மடக்கி பிடிக்க முயன்றனர்.
ஆறுமுகம் புல்லட்டை சாலையின் நடுவே போட்டு விட்டு கருவேல மர காட்டுக்குள் தப்பி ஓடினார். இளைஞர்கள் விரட்டி சென்று ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்தனர்.
இது குறித்து நீதிமன்ற அமர்வு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர்கள் பாலன், குமார் இருவரும் கஞ்சா வாங்க வந்த விக்னேசையும், வேல்முருகனையும் பிடித்து விசாரித்து கொண்டிருந்தனர்.
விரட்டி பிடித்த கஞ்சா வியாபாரி ஆறுமுகத்தையும் நீதிமன்ற அமர்வு காவல் நிலைய எஸ்ஐயிடம் ஒப்படைத்தனர். எஸ்ஐ பாலன் புங்கனூர் எங்கள் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது இல்லை என்று ஆறுமுகத்தை பிடித்து செல்லாமல் நின்று கொண்டிருந்தார்.