in

சபரிமலைக்கு தனது மகளுடன் சைக்கிளில் புனித யாத்திரை செல்லும் நடமாடும் தேநீர் வியாபாரி

சபரிமலைக்கு தனது மகளுடன் சைக்கிளில் புனித யாத்திரை செல்லும் நடமாடும் தேநீர் வியாபாரி

 

புவனகிரியில் இருந்து சபரிமலைக்கு தனது மகளுடன் சைக்கிளில் புனித யாத்திரை செல்லும் நடமாடும் தேநீர் வியாபாரி

தொடர்ந்து 12 ஆவது ஆண்டாக சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் அப்பா மகள்

கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நடமாடும் தேநீர் வியாபாரி கணேசன் அவரது மகள் யுவராணி ஆகியோர் தொடர்ந்து 12 வது ஆண்டாக தேநீர் விற்பனை செய்யும் தனது சைக்கிளில் புவனகிரி முதல் சபரிமலை வரை சைக்கிளில் ஐயப்பனை தரிசிக்க பயணத்தை தொடங்கி உள்ளார்.

இன்று காலை புவனகிரி ஐயப்பன் ஆலயத்தில் அப்பா மகள் இருவரும் இருமுடி கட்டி அதனை சைக்கிளில் பின்புறம் கேரியரில் வைத்து இருக்க கட்டி கோவில் வாசலில் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து தனது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் இன்றிலிருந்து சபரிமலை சென்று அடைய ஆறு நாட்கள் ஆகும் என்றும் போகும் வழியில் விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், குமுளி ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் தங்கி மீண்டும் பயணத்தை தொடங்குவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இது பற்றி கணேசன் கூறும்பொழுது சென்ற ஆண்டு 11 ஆம் ஆண்டு சைக்கிள் பயணத்தை மேற்கொண்ட எங்கள் பயணம் செய்தி சேனல் வாயிலாக பட்டி தொட்டி எங்கும் பரவியதால் செய்தியின் எதிரொலியால் செல்லும் இடமெல்லாம் எங்களுக்கு உற்சாக வரவேற்பும் கடைகளில் உணவும் தேனீரும் இலவசமாக கொடுத்தனர் என்றும் எனவே அனைத்து ஊடகத்திற்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

What do you think?

அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மஹோற்சவ விழா கொடியேற்றம்

தஞ்சை மாவட்டம் கோட்டூர் SNJ குழுமத்தின் ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலையின் பந்தநல்லூர் பகுதி கரும்பு அலுவலகம் திறப்பு விழா.