in

காஞ்சி காமாட்சிக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடை காணிக்கை

காஞ்சி காமாட்சிக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடை காணிக்கை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு திருவிழாக் காலங்களில் உற்சவத்தின் போது பயன்படுத்துவதற்காக சென்னையை சேர்ந்த தம்பதியர் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை செவ்வாய்க்கிழமை காணிக்கையாக வழங்கினார்.

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த விஜயகுமார்}நீரஜா தம்பதியர் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயரிடம் வழங்கினார்.முன்னதாக அவர் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் வைத்து வழிபாடு செய்தார். இது குறித்து கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் கூறுகையில் இக்குடையானது திருவிழாக்காலங்களில் உற்சவர் காமாட்சி அம்பிகைக்கும்,தேர்த்திருவிழா நடைபெறும் நாட்களிலும் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

What do you think?

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா உத்தரவின் பேரில் உலக மக்கள் நன்மை கருதி விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடைபெற்றது.

1 கோடியில் கட்டப்படும் குரம்பு வேலை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் காட்டுப்புத்தூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை.