தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவர் கைது
தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை, மதுரை, மானாமதுரை என தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த 60 வயதுடைய குமரேசன் எனும் முதியவர் கடிதம் வாயிலாக ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து மதுரை ரயில்வே காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குமரேசன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் குமரேசனை கைது செய்த ரயில்வே காவல்துறையினர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தேனி கிளை சிறையில் அடைத்தனர்.