in

700 கோடியை தாண்டிய ஆனந்த் அம்பானி..யின் திருமண செலவு

700 கோடியை தாண்டிய ஆனந்த் அம்பானி..யின் திருமண செலவு

 

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் வெள்ளிக்கிழமை மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவில் திருமணம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது . சனிக்கிழமை நடைபெற்ற திருமணம் மற்றும் ‘சுப ஆசிர்வாத்’ விழாவைப் போலவே, ‘மங்கள் உத்சவ்’ நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாக்களில் பங்கேற்பதற்காக இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து மும்பைக்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் CELEBRITiES வந்தனர்.

சமூக ஆர்வலர் கிம் கர்தாஷியன், ஷாருக்கான் மற்றும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் முதல் அமெரிக்க பாடகர்-பாடலாசிரியர் நிக் ஜோனாஸ், ஹாலிவுட் நடிகர் ஜான் சினா மற்றும் பாலிவுட் ஐகான்கள் சல்மான் கான் மற்றும் பிரியங்கா சோப்ரா, ஆகியோர் கலந்து கொண்டனர். புதுமணத் தம்பதிகளை ஆசிர்வதிப்பதற்காக சனிக்கிழமை நடைபெற்ற ‘சுப் ஆசிர்வாத்’ விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் போன்ற அரசியல் தலைவர்களும் அனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொண்டனர்.

குஜராத்தின் ஜாம்நகரில் 1,200 விருந்தினர்களுக்கு விருந்தளித்து மார்ச் மாதம் திருமணத்திற்கு முந்தைய விழாக்களை அம்பானிகள் தொடங்கினர். சங்கீத விழாவின் போது, கனடிய பாடகர் ஜஸ்டின் பீபர் … கலந்து கொண்டு நிகழ்ச்சியை விறுவிறுபாக்கினார்.

ராதிகா வீரன் ஷைலா மெர்ச்சன்ட்டின் இளைய மகள் ஆவார். ராதிகா இப்போது என்கோர் ஹெல்த்கேர் குழுவில் இயக்குநராகப் பணிபுரிந்தாலும், ராதிகா பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்திலும் பல ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளார். இந்தத் திருமணத்தின் பட்ஜெட் சுமார் 700 கோடியை தாண்டி விட்டதாம்.

What do you think?

Reels பார்க்கும் ரசிகர்களை கவர்வது நடிகைகளுக்கு சவால்

ரங்கோலியில் காமராஜர் உருவப்படத்தை வரைந்த புதுச்சேரி காவல்துறை உதவி ஆய்வாளர்