in

 சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

 சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

 

விழுப்புரம்: திமுக முப்பெரும் விழாவில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கக் கோரி வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 1987 செப்.17-ம் தேதி மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர்.

இதையொட்டி ஆண்டுதோறும் செப்.17-ம் தேதியை இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளின் நினைவு தினமாக பாமகவினர் கடைபிடித்து வருகின்றனர்.இன்று தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கில், இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் உருவப்படத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத்தலைவர் கோ.க.மணி, சிவகுமார் எம்எல்ஏ, வழக்கறிஞர் பாலு, பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி அவரின் உருவச் சிலைக்கு ராமதாஸ் மரியாதை செலுத்தினார்.

பெரியாரின் கனவை நனவாக்க உறுதியேற்றுள்ளோம். அவரின் கொள்கையை முழுமையாக ஏற்ற கட்சி பாமக. அவரின் வழியில் வந்த கட்சிகள் கொள்கைகளை மட்டும் பேசிக்கொண்டுள்ளனர்.

பெரியார் சமூகநீதிக்கான இந்திய அளவிலான அடையாளச் சின்னம். சமூகநீதிக்கான அநீதிகளை ஆளும் திமுக செய்து வருகிறது. தமிழகத்தில் சாதியை வைத்தே அடக்குமுறைகள் ஏற்பட்டன. இதைத் தெரிந்துகொள்ளக் கூட முதல்வருக்கு ஆர்வமில்லை. சாதிவாரி கணக்கெடுப்புக்காக 45 ஆண்டுகளாக பாமக போராடிவருகிறது என்று கூறினார்.

What do you think?

கனகசபா நாட்டியாலயா பரதநாட்டிய சலங்கை பூஜை விழா

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (17.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News