அன்புமணி ராமதாஸ் பிற்போக்குத்தனமாக பேசுகிறார் – செல்வபெருந்தகை பேட்டி
மத்திய நிதிநிலை அறிக்கைகள் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிற்போக்குத்தனமாக பேசுகிறார் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டி உள்ளார்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மயிலாடுதுறையில் பேட்டி.
மயிலாடுதுறையில் இன்று சட்டமன்ற பொது கணக்கு குழு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது பொது கணக்கு குழு தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்மான செல்வப் பெருந்தகை தலைமையில், குளம் சீரமைக்கப்படும் பணி, வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வுகள் செய்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் செல்வப் பெருந்தகை மற்றும் பொது கணக்கு குழு உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்.
கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த திரு செல்வப் பெருந்தகை 25 நாடாளுமன்ற உறுப்பினர்களாவது தமிழ்நாட்டில் இருந்து பாஜக கூட்டணிக்கு அளித்திருந்தால் தமிழ்நாடு புறக்கணிக்கப்படாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிய பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
அவர் பேசும்போது பிற்போக்குவாதிகள் அப்படித்தான் பேசுவார்கள், 25 எம்பிக்கள் கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு அப்படித்தான் புறக்கணிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பிய அவர் இது என்ன பேச்சு பொது வாழ்க்கையில் இருப்பவர் பேசும் பேச்சா இது என்று அன்புமணி ராமதாசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.
தமிழ்நாடு மக்கள் இதையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஏற்கனவே அவர்களுக்கு ஜனநாயக ரீதியாக தண்டனை கொடுத்துள்ளார்கள், ஒரு இடம் கூட கிடைக்கவில்லை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவுக்கு கீழே டெபாசிட் வாங்காத அளவிற்கு மக்கள் தீர்ப்பளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
இது மாநிலத்திற்கான நிதிநிலை அறிக்கையோ தென்பகுதி வடபகுதி கிழக்குப் பகுதிக்கான நிதிநிலை அறிக்கை இல்லை இந்த தேசத்திற்கான நிதிநிலை அறிக்கை. தமிழ்நாடு முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர் உண்மைக்குப் புறம்பான தகவல்களை தெரிவிக்கிறார்.
முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது உதய் மின் திட்டத்தில் சேரவில்லை, இதில் சேர்ந்தால் தமிழ்நாட்டில் உரிமைகள் பறிக்கப்படும், தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரானது என்று அம்மையார் ஜெயலலிதா தெரிவித்தார்கள். ஆனால் அவர் இறந்த பிறகு ஏன் கையெழுத்து விட்டார்கள் அதுதான் மின்கட்டண உயர்வுக்கு காரணம் இருந்தாலும் அதனை ரத்து செய்ய நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.