in

ரசிகர்களின் அமோக ஆதரவில் வசூலில் ராயனை மிஞ்சும் அந்தகன்


Watch – YouTube Click

ரசிகர்களின் அமோக ஆதரவில் வசூலில் ராயனை மிஞ்சும் அந்தகன்

நீண்ட நாட்களுக்கு பிறகு பிரஷாந்த் கதாநாயகனாக நடித்த அந்தகன் படம் கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி திரைக்கு வந்தது தேசிய விருது பெற்று ஹிந்தியில் வெளியான அந்தாதுன் என்ற படத்தின் ரீமேக் தான் அந்தகன்.

இப்படத்தில் சிம்ரன், கார்த்திக், ஊர்வசி, சமுத்திரகனி, கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு , பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

.இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி உள்ளார் இசை சந்தோஷ நாராயணன். இந்த படத்தில் பார்வை இல்லாத இளைஞராக கிருஷ்ணா என்ற கேரக்டரில் பிரசாந்த் நடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இவருக்கு பார்வை திரும்புகிறது. ஆனால் குருடாகவே நடிதுகொண்டிருகிறார். நிஜமாகவே கண்பார்வை இல்லை என்று நினைத்து பிரியா ஆனந்த் தனது Cafee ….யில் பியோனோ வாசிக்கும் வேலையை கொடுக்கிறார்.

அந்த Cafee….இக்கு வரும் கார்த்திக் தனது திருமண நாளை முன்னிட்டு மனைவி சிம்ரனுக்கு ஒரு பாடல் இசைக்க முடியுமா என்று பிரசாந்திடம் கேட்கிறார். அந்த நேரத்தில் தனது காதலரான சமுத்திரக்கனி உடன் சிம்ரன் இருப்பதை பார்த்து, சிம்ரன் போட்டு தள்ளுகிறார் கார்த்திக், ஆனால் இதை பார்த்தும் பார்க்காதது போலவே நடிக்கிறார் பிரசாந்த்.

உண்மை தெரிய வர பிரசாந்தை போட்ட திட்டமிடுகிறாறார்கள் சமுத்திரக்கனியும், கார்த்திக்கும் இவர்களிடம் இருந்து பிரசாந்த் எப்படி தப்பிக்கிறார் என்பதே மீதி கதை அடுத்தடுத்து திருப்பங்களால் கதை விறுவிறுப்பாக செல்கிறது.

அந்தகன் முதல் நாளே 65 லட்ச ரூபாயை வசூல் செய்து இருக்கிறது, மேலும் ஞாயிறன்று 1.5 கோடியை இந்த படம் வசூல் செய்திருக்கிறது. ரசிகர்களின் Response….சை பார்க்கும் பொழுது வரும் நாட்களில் வசூல் ரீதியாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுமையாக இருந்து நிதானதுடன், நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெயித்திருக்கிறார் பிரசாந்த்.


Watch – YouTube Click

What do you think?

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

பாகுபலியின் அட்டை காபியா? கங்குவா…கிண்டலடிக்கும் ரசிகர்கள்