in

தனது மகனுக்காக சிறப்பு பூஜை ஆந்திரா நடிகர் மோகன் பாபு


Watch – YouTube Click

தனது மகனுக்காக சிறப்பு பூஜை ஆந்திரா நடிகர் மோகன் பாபு

 

பிரபல தெலுங்கு திரைப்பட ஹீரோ மோகன் பாபு செங்கோலுடன் வந்து அண்ணாமலையார் ஆலயத்தில் தனது மகன் ஹீரோவாக நடித்து வெளிவர இருக்கும் கண்ணப்பா திரைப்பட ம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் ஆந்திரா நடிகர் மோகன் பாபு திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இவர் தெலுங்கில் 500 ககும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார், பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு தயாரிப்பில் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் நடிகர் மோகன் பாபுவின் மகனும் நடிகர் விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடித்து வரவிருக்கும் கண்ணப்பா திரைப்படம் வெற்றி பெற அண்ணாமலையார் ஆலயத்திற்கு செங்கோளுடன் வந்து அண்ணாமலையாரிடம் சிறப்பு பூஜை செய்தார்.

இந்நிகழ்வில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜாராம் அவரை வரவேற்று பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவிற்கு அண்ணாமலையார் பிரசாதத்தை வழங்கினார்.

இந்நிலையில் தற்போது அண்ணாமலையார் ஆலயத்தில் தெலுங்கானா மற்றும் ஆந்திரா பக்தர்கள் அதிகம் சாமி தரிசனம் செய்ய வருவதால் நடிகர் மோகன் பாபிவிடம் செல்பி எடுத்துக் கொண்டார்கள்.

இந்தப் படத்தின் திரைக்கதையை பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகனும் திரைப்பட நடிகர் விஷ்ணு மஞ்சு உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறுகையில்

பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி