மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து முகாம்களுக்கு கூட்டம் கூட்டமாக விஜயவாடாவில் புறப்பட்டு செல்லும் பொதுமக்கள். மீட்பு பணியில் அதிகாரிகள், மீட்பு குழுவினர்.
கடந்த இரண்டு நாட்களாக விஜயவாடா சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழை, அதனை தொடர்ந்து கிருஷ்ணா நதியில் கரையை கடந்து பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளம் ஆகியவை விஜயவாடா மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஒரு சில பகுதிகளை தண்ணீரில் மூழ்க செய்துவிட்டது.
மலை சற்று தணிந்த நிலையில் இன்று மதியத்திற்கு மேல் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து புறப்பட்டு கூட்டம் கூட்டமாக அரசு அமைந்திருக்கும் முகாம்களுக்கு செல்கின்றனர்.
கழுத்தளவு மழை வெள்ளத்தில் நடந்து செல்ல இயலாமல் இருக்கும் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் ஆகியோரை மீட்பு குழுவினர், அதிகாரிகள் ஆகியோர் படகுகளில் ஏற்றி முகாம்களுக்கு அழைத்து செல்கின்றனர்.