மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஜேசிபி வாகனத்தில் பயணித்து பொதுமக்களை சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
அடுக்குமாடி குடியிருப்பவர்கள் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் ஹெலிகாப்டரில் இருந்து கொட்டுகின்றன.
எங்களை கவனிக்க யாரும் இல்லை.பொதுமக்கள் குற்றச்சாட்டு.
விஜயவாடாவில் மழை,வெள்ள பாதிப்புக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் சந்திரபாபு நாயுடு ஜேசிபி வாகனத்தில் பயணித்து பொதுமக்களை சந்தித்தார்.
அப்போது அவர்களிடம் உணவு, குடிநீர், பால் ஆகியவை போன்ற அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் கொண்டு வந்து சேர்க்கிறார்களா என்று பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார்.
அப்போது அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் எங்களுக்கு கிடைக்கின்றன என்று பொதுமக்கள் முதல்வரிடம் கூறினர்.
ஒரு சிலர் மழை வெள்ளத்தில் எங்களுடைய வீடுகள் இடிந்து விட்டன என்று ஆதங்கப்பட்டனர். நிலைமை சரியான உடன் உங்களுக்கு வீடு கட்டி கொடுக்கிறேன் என்று அவர் வீடுகளை இழந்த பொது மக்களுக்கு உறுதி அளித்தார்.
ஆனால் இதற்கு நேர் மாறாக ஒரு சில பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அடுக்குமாடி வீடுகளில் குடியிருக்கும் பொது மக்களுக்கு மட்டுமே உணவு, குடிநீர் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கின்றன.
அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ஹெலிகாப்டரில் இருந்து கொட்டுகின்றன.
ஆனால் குடிசை வீடுகளில் வசிக்கும் எங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பசியால் வாடுகிறோம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இத்தகைய குற்றச்சாட்டுகளில் பின்னால் அரசியல் இருப்பதாகவும், எதிர்க்கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்று தெலுங்கு தேசம் கட்சி என்று கூறுகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணா நதிக்கு வரும் மழை நீரின் அளவு சற்று குறைந்து விஜயவாடாவில் சூழ்ந்திருந்த வெள்ளம் வடிய துவங்கி உள்ளது எனவே அரசு அமைத்த முகாம்களில் தங்கி இருந்த பொதுமக்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பத் துவங்கி இருக்கின்றனர்.