வங்கியிலிருந்து பணம் எடுப்பவர்களை குறிவைக்கும் ஆந்திரா கும்பல்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கைவரிசை காண்பித்தவர் கைது
ரூ 5 ,50000 பணம் மீட்பு.
அருப்புக்கோட்டை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கணேசன் /39
இவர் கடந்த 2 ஆம் தேதி வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ 5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை தனது இரு சக்கரவாகனத்தில் உள்ள பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக் கொண்டு அதன்பின் அருகில் உள்ள மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்க சென்றுள்ளார்.
மருந்தை வாங்கிவிட்டு மீண்டும் வண்டியை எடுக்க வந்து பார்த்தபோது வண்டி டேங்க் கவரில் வைத்திருந்த பணப்பையை காணவில்லை.
இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் கணேசன் புகார் கொடுத்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து பணத்தை எடுத்தவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் இதே போல் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துச் செல்லும் போது ஒருவரிடம் திருடியதை அப்பகுதி போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.
அச்சம்பவத்தில் ஆந்திர மாநிலம் நெல்லுர் தாமாவரம் திப்பா காலனியை சேர்ந்த அவுலா ராகேஷ் (வயது 26) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் திருப்பத்தூர் பகுதியில் திருடியதும் அருப்புக்கோட்டையில் கைவரிசை காண்பித்ததும் அவுலா ராகேஷ் தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன் பின் அருப்புக்கோட்டை போலீசார் அவுலா ராகேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்ததில் அருப்புக்கோட்டை கணேசன் என்பவரது மோட்டார் சைக்கிளில் பணம் திருடியது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையில் திருடிய பணத்தை திருச்சி பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பணம் கைப்பற்றப்பட்டது.
மேலும் போலீசார் விசாரணையில் ஆந்திராவிலிருந்து ஒரு கும்பல் தமிழகத்தில் நுழைந்துள்ளதாகவும் அந்த கும்பலின் தலைவன் திட்டம் போட்டு கொடுத்து குறைந்த விலையில் இரு சக்கர வானத்தை வாங்கி அதன் பின் வங்கிகளுக்கு சென்று அங்கு பணம் எடுத்து கவனக்குறைவாக உள்ளவர்களை நோட்டமிட்டு அவர்களிடம் கைவரிசை காண்பிப்பதும் இந்த கொள்ளை கும்பலின் நோக்கம் என தெரியவந்துள்ளது. தற்போது அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்வர்களை போலீசார் தேடி வருகின்றனர்.