ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றி இறைச்சி, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை இருந்தது உண்மைதான்.
திருப்பதியில் ஆந்திரா ஐடி துறை அமைச்சர் நாரா லோகேஷ் உறுதி.
ஆந்திர ஐடி துறை அமைச்சர் நாரா லோகேஷ் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று இரவு ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திருப்பதி மலையின் புனிதத்தை கெடுத்து பக்தர்களுக்கும் இறைவனுக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தினார்கள்.
என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அரசியல் கட்சிகள் ஆகிய நாங்கள் ஏழுமலையானிடம் விளையாட வேண்டாம், நீங்கள் நாசமாகி போய் விடுவீர்கள் என்று எச்சரித்தோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் புதிய இ ஓ வை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நியமித்து அவருக்கு முழு அதிகாரத்தையும் கொடுத்தோம்
லட்டு தயாரிக்க அப்போது பயன்படுத்திய நெய்யை நேஷனல் டைரி டெவலப்மெண்ட் போர்டு ஆய்வகத்துக்கு சோதனை செய்த போது அந்த நெய்யில் பன்றி இறைச்சி,மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
சந்திரபாபு நாயுடு ஆதாரம் இல்லாமல் பேச மாட்டார். இப்போது ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறோம் என்று அப்போது கூறினார்.