in

ஆந்திரா விஜயவாடா இந்திரகீலாத்திரி மலையில் பாறை சரிவு

ஆந்திரா விஜயவாடா இந்திரகீலாத்திரி மலையில் பாறை சரிவு

பெருத்த சத்தத்துடன் சரிந்து விழுந்த பாறைகள் வீட்டின் மீது விழுந்து நான்கு பேர் படுகாயம். மூன்று பேர் மீட்பு மருத்துவமனையில் அனுமதி.

விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோவில் அமைந்திருக்கும் மலையின் பெயர் இந்திரகீலாத்திரி.

இந்திரகீலாத்திரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள பொதுமக்கள் அங்கு வீடுகளை கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் இந்திரகீலாத்திரியில் பொதுமக்கள் வீடுகளை கட்டி வாழ்ந்து வரும் பகுதியில் திடீரென்று பலத்த சத்தத்துடன் பாறை சரிவு ஏற்பட்டது.

சரிந்து விழுந்த பாறைகள் வீடு ஒன்றின் மீது விழுந்து அந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இடி விழுந்தது போன்ற சத்தத்துடன் பாறை சரிவு ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது அந்த வீடு முழுவதுமாக சிதைந்து நான்கு பேர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது தெரிய வந்தது.

இது பற்றி போலீசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த அவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த நான்கு பேரில் மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் ஒருவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

What do you think?

தனியார் பொறியியல் கல்லூரி  பெண்கள் ஹாஸ்டல் ரகசிய கேமரா விவகாரம் மாணவ மாணவியர் தீவிர போராட்டம்

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (31.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News