in

தெரு விளக்குகளை சீரமைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள்  தீப்பந்தம் ஏற்றி எச்சரிக்கை போராட்டம்

தெரு விளக்குகளை சீரமைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள்  தீப்பந்தம் ஏற்றி எச்சரிக்கை போராட்டம்

 

பண்ருட்டி அருகே பல மாதங்களாக தெரு விளக்குகளை சீரமைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இரவு நேரத்தில் தீப்பந்தம் ஏற்றி எச்சரிக்கை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பூங்கோணம் ஊராட்சி கம்பன் நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் அப்பகுதியில் தெரு விளக்குகள் பழுதாகி பல மாதங்களாக அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும் இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றம்சாட்டி கம்பன் நகர் பகுதியில் மின்கம்பங்களில் தற்காலிக தீப்பந்தங்களை அமைத்து தீப்பந்தங்களை ஏற்றி அப்பகுதி மக்கள் எச்சரிக்கை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது கம்பன் நகர் பகுதியில் அதிகளவில் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவர்கள் வசிப்பதாகவும் அவர்களுக்கு இரவு நேரங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டால் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு தட்டித் தடுமாறுவதாகவும் அதிகாலையில் பெண்கள் வீட்டு வாசல் தெளித்து கோலம் போடுவதற்கு கூட அச்சப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இத்துடன் பள்ளி மாணவர்கள் மாலை நேரத்தில் டியூஷன் சென்று விட்டு வீடு திரும்பும் போது தெரு விளக்குகள் இல்லாததால் விபத்துகளில் சிக்கிக் கொள்வதாகவும் சாலைகள் சேதம் அடைந்து காணப்படுவதால் பள்ளி வாகனங்கள் கூட தங்கள் பகுதிக்கு வராமல் தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்களை இறக்கிவிட்டு சென்றதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் இதனால் மாணவர்கள் கடும் அவதிப்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது மட்டும் இன்றி இரவு நேரங்களில் பாம்பு பூரான் உள்ளிட்டவைகள் ஊடுருவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பூங்கோனும் ஊராட்சி கம்பன் நகர் பகுதியில் கவனம் செலுத்தி தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே நிலை தொடர்ந்தால் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

What do you think?

தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம் மீண்டும் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

ஸ்ரீமுஷ்ணம் அருகே பிரசித்தி பெற்ற கானூர் ஸ்ரீ செல்லியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்