மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயிலில் ஆனி மாத அமாவாசை தினத்தில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏந்தி வழிபாடு
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில்உலகப் புகழ் பெற்ற ஆன்மீக திருத்தலமாக விளங்கிவரும் திருக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் ஆனி மாத அமாவாசை தினமான வெள்ளிக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு பால்,தயிர், பன்னீர்,சந்தனம் விபூதி,பஞ்சாமிர்தம்,போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
பலவகை பூக்களால் தங்க ஆபரண நகைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உற்சவர் அங்காளபரமேஸ்வரி காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .
இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 10.30 மணி அளவில் உற்சவற் அங்காளம்மனை பூசாரிகள் பம்பை மேல தாளங்கள், முழங்க தோளில் சுமந்து வடக்கு வாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்து உற்சவத்தில் அமர வைத்து பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாட ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தேங்காய், எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏந்தி அங்காளம்மா தாயே … அருள் புரிவாயே… என கோஷங்கள் எழுப்பி அங்காளம்மனை வழிபட்டனர்.
ஊஞ்சல் உற்சவ ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் உள்ளிட்டு அறங்காவலர்கள்,கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மேலும் ஊஞ்சல் உற்சவத்திற்காக தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேல்மலையனூர் பகுதிக்கு இயக்கப்பட்டது.
செஞ்சி துணைக் கண்காணிப்பாளர் கவினா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.