நாமக்கல் மோகனுார் பெருமாள் ஆலயத்தில் ஆனிமாத பிரம்மோட்ஷச தேர்திருவிழா – 5-ம் நாள் ஷேசவாகனத்தில் திருவீதி உலா
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அக்ரஹாரத்தில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஆலயத்தில் ஆனி மாத பிரம்மோட்ச தேர்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் துவங்கி 5 — நாள் திங்கள்கிழமை மாலை உற்சவஅருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி துளசியால் அர்ச்சனை செய்த பின்கோபுர தீபம் கும்ப தீபம் நட்சத்திர தீபம் மற்றும் ஷோடச உபசாரங்கள் நடைபெற்ற பின் மகாதீபம் காண்பிக்கப்பட்டன திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றன.
வழிநெடுக பக்தர்கள் தேங்காய் உடைத்து ,வாழைபழம் வைத்து வழிபாடு செய்தனர்இதில் ஏராளமானோர் தரிசனம் பெற்று சென்றனர்.மேலும் விழாவில் முக்கிய நிகழ்வான 10ம் தேதி புதன் அன்றுதிருக்கல்யாண வைபவமும் 11-7-2024 வியாழன் அன்று குதிரை வாகனத்திலும்விழாவில் ஒன்பதாம் நாள் 12-7-2024 வெள்ளிக்கிழமை காலை 5 – 15 மணி முதல் 6:00 மணிக்குள் சுவாமி ரதம் ஏறும் நிகழ்வும் பின்னர் காலை 9 மணிக்கு திருத்தேர் திருவீதி பெருவிழா மிக விமர்சையாக நடைபெற உள்ளன விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையதுறை கோவில் நிர்வாகம்செய்து வருகின்றன