மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட அனிதா விஜயகுமார்..பேரனை கொண்டாடும் விஜயகுமார்
முன்னணி நடிகர்களை விட அனிதா விஜயகுமார் குடும்பத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் தான் எப்பொழுதுமே வலைதளத்தில் வைரலாகும்.
இவர்கள் குடும்பத்தில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்துடே இருக்கும் போல…எல்லோரும் பார்க்கணும்…னே ஏதாவது போஸ்ட் போட்டுட்டே இருபாங்க போல…அப்படி தாங்க தற்போது ஒரு சம்பவம் நடந்திருக்கு.
நடிகர் விஜயகுமாரின் பிள்ளைகள் எல்லோரும் சினிமா துறையில் இருக்க இவருடைய இரண்டாவது மகள் அனிதா மட்டும் சினிமாவில் நடிக்க விருப்பபடாமல் டாக்டரா இருக்கிறார்.
இவரது கணவர் கோகுலம் ஒரு மருத்துவர் காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு தியா, ஸ்ரீ ஜெய் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்க தியாவிற்கு அண்மையில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.
இவரும் மருத்துவம் படிக்கும் போது தன்னுடன் படித்த திலிப் என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில் அனிதாவின் இரண்டாவது மகனான ஸ்ரீ ஜெய் சமீபத்தில் மருத்துவ படிப்பை முடித்து டாக்டர் ஆகிஇருக்கிறார்.
இது குறித்து இன்ஸ்டால் பக்கத்தில் ஒரு போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் என்னுடைய கனவு நிறைவேறி உள்ளது …இன்ஸ்டாகிராம் profile ..லில் Student என்று இருந்ததை மாற்றி ஐ அம் டாக்டர் என்று மாட்டியிருக்கிறார்.
அதேபோல தன்னுடைய தம்பி ஸ்ரீ ஜெய் மருத்துவராக ஆனதற்கு வாழ்த்து கூறி தியாவும் டாக்டர் குடும்பத்திற்கு இன்னொரு புதிய டாக்டர் வந்திருக்கிறார் என்று போஸ்ட் செய்துள்ளார்.
இது பற்றி அனிதா விஜயகுமாரும் கூறியதாவது ஸ்ரீ ஜெய்யை முதல்முறையாக மருத்துவர் உடையில் பார்க்கும் போது மகிழ்சியாக இருக்கிறது என்று அவருடைய புகை படத்தை வெளியிட்டு மகிழ்சியை தெரிவித்து இருக்கிறார்.
இவர்களுக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து. நடிப்பில் கவனம் செலுத்தாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி டாக்டர் ஆயிருக்கும் அனிதாவை தன் பிள்ளைகளையும் டாக்டராகி சாதித்து காட்டியிருக்கிறார் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.