திக் திக் மனதுடன் ரசிகர்கள்.. பேய் தனமாக இருக்க போகுது அஞ்சலியின் ஆடியோ லாஞ்ச்
பொதுவாக பட விழா என்றால் ஹோட்டல்கள், தியேட்டர்கள், கல்லூரிகள் அல்லது விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் தான் வழக்கமாக நடைபெறும்.
ஆனால் நடிகை அஞ்சலியின் பட விழாவை சுடுகாட்டில் நடத்த போவதாக படக் குழுவினர் அறிவித்து ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்தனர், அஞ்சலியின் நடிப்பில் ‘கீதாஞ்சலி’ என்ற பேய் படம் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்து செம போடு போட்ட படம்.
ஒரு பெண் அவள் வசிக்கும் அப்பார்ட்மென்ட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்கின்றாள்…அங்கு திரைப்படம் இயக்குனர் ஒருவர் தங்க….பல அமானுஷ்ய விஷயங்கள் நடக்க அந்த பெண் ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்பதே கதை பார்த்து சலித்து போன பேய்க்கதை என்றாலும் இயக்குனர் Shiva Turlapati படத்தை பிரசன்ட் பண்ண விதத்தில் ரசிகர்கள் வெச்ச கண்ணை எடுக்காமல் இங்கிட்டு அங்கிட்டு நகர விடாமல் செய்து விட்டார்கள்.
அதன் பிறகு அஞ்சலிக்கு நிறைய பட வாய்ப்புகள் தெலுங்கில் வரிசை கட்டி நின்றது, தற்பொழுது கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகமாக கீதாஞ்சலி மீண்டும் வந்தால் என்ற பேய் படம் தயாராகி உள்ளது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிட பட குழு திட்டமிட்டுள்ளது மீண்டும் Shiva Turlapati இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் உள்ள வேகம் பேட்டை மயானத்தில் நடக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாட்டை பட குழு சுடுகாட்டில் முழு வீச்சில் அமைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த அறிவிப்பு திரையுலகத்தை மட்டுமல்ல ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது படம் மட்டுமல்ல இசை வெளியீட்டு விழாவும் பேய்த்தனமாக இருக்கும் என்று மட்டும் தெரிகிறது.
தில் உள்ள ரசிகர்கள் மட்டும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கவும்.. ஊருகுள்ள பட விழா வச்சாலே போட்டியை(boti) எடுதுடுவிங்க. இதுல சூடுகாட்டிலையா…புதுசா ஏதாவது செய்றேன் என்று போட்டு தள்ளிடாதிங்கடா.. உசுருக்கு gaurantee குடுபிங்களா…?