அண்ணா சீரியல் நடிகருக்கும் லப்பர் பந்து நடிகைக்கும் நிச்சயதார்த்தம்
சீரியலில் ஒன்றாக நடித்த சின்னத்திரை பிரபலங்கள் இருவர் விரைவில் வாழ்க்கையிலும் இணைகிறார்கள்.
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குடும்ப பின்னணியைக் கொண்ட காதல் தொடரான கன்னத்தில் முத்தமிட்டால் என்ற சீரியலில் நடித்தவர் சந்தோஷ் . இந்த சீரியல் கடந்த ஆண்டு முடிந்த நிலையில் சந்தோஷ் …அண்ணா சீரியலில் கமிட்…ஆனார்.
அந்த சீரியலில் இருந்து தற்போது விலகி விட்டார். இவருக்கும் புதிய பார்வை என்ற ஷார்ட் ஃபிலிம் மற்றும் லப்பர் பந்து படத்தில் நடித்த மௌனிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது .
கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் பிரபலமான மௌனிகாவை பல வருடங்களாக காதலித்து வந்தார் பெற்றோர்களின் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.
இந்த ஜோடி தங்களது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட ரசிகர்கலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.