அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை ….. தடையை மீறி பேரணி… நடிகை குஷ்பு கைது
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை…இக்கு மவுனம் காக்கும் திமுக அரசை எதிர்த்து, மதுரையில் பாஜக மகளிர் அணி பேரணியை குஷ்பு துவக்கிவைத்தார்.
மதுரையில் இருந்து சென்னைக்கு பேரணியாக செல்லும் என்று பாஜக அறிவித்திருந்தது. ஆனால், பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் தடையை மீறி பேரணி தொடங்கியது.
திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிவேல் யாத்திரைக்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் திரண்டனர். இந்நிகழ்ச்சியில் பொன் ராதாகிருஷ்ணனுடன் கட்சியின் புதிய தலைவரான குஷ்பு சுந்தர் கலந்து கொண்டார்.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் குஷ்பூ சுந்தர், ‘வெற்றிவேல் யாத்திரை’யில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்ய பட்டார்.. வேல் யாத்திரை ஒரு பிரமாண்டமான முடிவிற்குத் திட்டமிடப்பட்டுள்ளது, கைதுகள் அவர்களின் உற்சாகத்தைக் குறைக்காது என்று TN அரசாங்கத்திற்கு எதிராக குஷ்பூ ட்வீட் செய்தார்.
எதை இலக்காகக் கொண்டோமோ அதை அடைவதற்கான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும். மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று குஷ்பு சுந்தர் நம்பிக்கை தெரிவித்தார்.
எத்தனை பேர் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் திருச்செந்தூரை நோக்கி தங்கள் பயணத்தை இன்னும் அதிக வீரியத்துடனும், ஆற்றலுடனும், நம்பிக்கையுடனும் தொடருவார்கள் என்றும் அவர் கூறினார்.