in

செஞ்சி பீரங்கிமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா

செஞ்சி பீரங்கிமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கிமேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அபித குஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழாவில் 108 கிலோ அன்னம் கொண்டு இனிப்பு,பலகாரங்கள், காய்கறிகள்,பழங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அண்ணாச்சலேஸ்வரர் … திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

செஞ்சி அருள்மிகு அபித குஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஐப்பசி மாத அன்னாபிஷே க விழாவை முன்னிட்டு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் பால், தயிர் ,சந்தனம் ,தேன், இளநீர், கரும்பு சாறு ,விபூதி என பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.அதனை தொடர்ந்து அன்னம் இனிப்பு பலகாரங்கள் காய்கறிகள் ,பழங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை கட்டப்பட்டு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிவனின் மீது அன்ன அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.பக்தர்கள் குழந்தையின்மை திருமண தடை நீக்கம் மற்றும் பத்பினியும் தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் அருள் பிரசாதத்தை பெற்று பக்தர்கள் பயபக்தியுடன் சாப்பிட்டனர்.

இக்கோவிலில் பக்தர்கள் வேண்டுதல் அனைத்தும் நடைபெறுகிறது என்ற நம்பிக்கையில் அன்னத்தைப் பெற்று வணங்கினர்

மேலும் அதனைத் தொடர்ந்து மீண்டும் அபிஷேக ஆராதனையில் அலங்காரத்தில் ரூபத்தில் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் பக்தர்களுக்கு மீண்டும் அலங்கார ரூபத்தில் காட்சி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் செஞ்சி மற்றும் சுற்றுப்புற கிராம பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது

What do you think?

புவனகிரியில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம் விழா

மதுரை திருப்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான் திருக்கோயிலில் அன்னாபிஷேகம்