in

சிங்கம்புணரி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரமாண்டாமாக நடைபெற்ற அன்னாபிஷேகம் விழா

சிங்கம்புணரி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரமாண்டாமாக நடைபெற்ற அன்னாபிஷேகம் விழா

பிரான்மலை மற்றும் முறையூர் சிவ ஆலயங்களில் உலகிற்கே படியளந்த ஈசனுக்கு அன்னத்தால் அபிஷேகம்.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் அருள்பாலிக்கும் அருள்மிகு குயில் அமுதநாயகி உடனுறை திருகொடுகுன்ற நாதசுவாமி கோவில் சுமார் 800 வருடங்கள் பழமையானது. இந்த ஆலயம் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 5 கோவில் தேவஸ்தானத்திற்கு உட்பட்டதாகும். இன்று ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பிரான்மலை திருக்கொடுக்குன்ற நாதர் கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பால் பன்னீர் பஞ்சாமிர்தம் விபூதி சந்தனம் உள்ளிட்ட 16 வகையான வாசனாதி திரவியங்கள் மூலம் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னத்தினால் அன்னக்காப்பு சுவாமிக்கு செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து காய்கறிகள் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆரத்தி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியின் அருள் பெற்றனர். ஏற்பாடுகளை பரம்பரை ஸ்தானிகம் திரு உமாபதி சிவாச்சாரியார் மற்றும் சுரேஸ் குருக்கள் செய்திருந்தார்

What do you think?

ஐப்பசி பௌர்ணமி அன்னபூரணி நாயகனுக்கு அன்னத்தால் அபிஷேகம். திரளான பக்தா்கள் வழிபாடு

மொத்த பணத்தை இழந்த திஷா பதானின் தந்தை