அண்ணாமலை பேச்சு வீண் பேச்சு, வெட்டிப் பேச்சு, ஒரு பிரயோஜனமும் இல்லை, பாஜகவை வளர்ப்பதை விட அவரை வளர்ப்பதற்கே அரசியல் செய்கிறார் அண்ணாமலை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மதுரை அருகே செக்கானூரணியில் நாளை நடக்கவிருக்கும் உண்ணாவிரதத்திற்கு நோட்டீஸ் வழங்கினார்
பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது
பாரதிய ஜனதா தேசிய தலைவர் அண்ணாமலை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எங்கள் பெயரை உச்சரித்து எங்களை மதுரை தாண்டி யாருக்கும் தெரியாது என்று விமர்சனத்தை முன் வைத்தார்கள், அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, இப்போது உதயகுமாரோ, செல்லூர் ராஜு யார் பெயர் யாருக்கு தெரிகின்றது என்பது தமிழ்நாட்டின் பிரச்சினை அல்ல. அண்ணாமலை மதுரையில் பேசி விட்டு சென்றதாலே அதற்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
கடந்த மாதம் 23ஆம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக தமிழ்நாடு முதலமைச்சர் நம்பிக்கையோடு ஒன்றிய அரசாங்கத்திற்கு சில கோரிக்கைகளை முன் வைத்தார், அதிலே மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத வறட்சி நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், தாம்பரம் செங்கல்பட்டு இடையேயான விரைவு மேம்பாலத்திற்கான நிதி ஒதுக்க வேண்டும், மதுரை கோவை மெட்ரோ ரயில் சேவைக்கான நிதியை ஒதுக்க வேண்டும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை விரைந்து செயல்படுத்த போதிய நிதி ஒதுக்கிட வேண்டும் என கோரிக்கைகளை ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகளை வெளியிட வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் நடந்தது என்னவென்றால் முதலமைச்சரின் கோரிக்கையை அவர்கள் தள்ளுபடி செய்தது மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கு புதிய அறிவிப்புகளோ புதிய திட்டங்களோ இந்த நிதி நிலை அறிக்கை இடம் பெறவில்லை. இது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்த ஒன்றுதான், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் முதலமைச்சர் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார், அவர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அவரைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியில் இடம் பெற்ற முதலமைச்சர்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தனர், அப்படி மீறி கலந்து கொண்டவர்களுக்கும் அங்கு நடைபெற்ற அவமானம் என்ன என்பதை அனைவருக்கும் தெரிந்தது.
டெல்லியில் இருந்து காணொளி மூலமாக பேட்டி அளித்த ரயில்வே அமைச்சர் இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு 6 ஆயிரம் கோடிக்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒதுக்கிய நிதியோடு ஏழு மடங்கு அதிகம் என பெருமை பேசினார்.
ஆனால் பாரதிய ஜனதா ஆளுகிற மாநிலங்களுக்கும் அவர்கள் கூட்டணி ஆளுகின்ற மாநிலங்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி குறித்து புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தார். ரயில்வேக்கு அதிக வருமானம் தரக்கூடியது தமிழ்நாடு தான், வருமானம் அதிகமாக தரக்கூடிய தமிழ்நாட்டிற்கு 6000 கோடி என்று அறிவித்துவிட்டு அதனை தற்போது ஆயிரம் ரூபாய் என்கிற அளவிலே அறிவிப்பின் அடையாளமாக ஒதுக்கி உள்ளனர். அறிவித்த திட்டங்களையும் ரத்து செய்துள்ளனர். இதுதான் உண்மையான நிலை
தற்போது பெங்களூரில் இரண்டு தினங்களுக்கு முன்பாக மூன்றாவது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆனால் மதுரை கோவைக்கு திட்ட அறிக்கை அனுப்பி பல ஆண்டுகளாகியும் இன்னும் திட்டம் நிலுவையில் உள்ளது.
மதுரையில் அண்ணாமலை வெறும் பேச்சு தான் பேசுகிறார், அவர் பேச்சில் வெறும் காற்று தான் வருகிறது, இந்த திட்டங்களுக்கு எல்லாம் நிதி வாங்கி தருவதற்கு ஏதாவது முயற்சி செய்திருந்தால் தமிழ்நாட்டின் பிரச்சனைகள் தீர்ந்திருக்கும். நிதி நிலைமையில் மிகப்பெரிய பற்றாக்குறையில் இருக்கிற இந்த சூழ்நிலையில் அவர் திராவிடத்திற்கு முடிவு கட்டுவேன் என்று வீர வசனம் பேசுவதாலே இந்த மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. நான் இப்போது கூறியிருப்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இன்னும் விரிவாகச் சொன்னால் அவர் தமிழ்நாட்டு மக்களை எப்படி புறக்கணித்துள்ளார் என்பது தெரியும்.
வாக்களிக்கவில்லை என்ற மக்களை வஞ்சிக்கும் அவருடைய நடவடிக்கை இது குறித்து வாய் திறக்காத பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் மாநில தலைவர் அண்ணாமலை இது குறித்து மதுரையில் ஒன்றுமே பேசவில்லை.
ஆனால் எங்களை வசைபாடுவதில் அவர் நேரத்தை செலவிடுகிறார். பாஜக மத்தியில் ஆளும் கட்சி அதை பயன்படுத்தி வெள்ள நிவாரண நிதி வாங்கி கொடுத்திருக்கலாம், பாரத பிரதமரை தனது செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்திற்கு அழைத்து வந்து தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு ஆறுதல் கூறி இருக்கலாம், நிதி கொடுக்காவிட்டலாம் ஆறுதலாவது கொடுத்தீர்களா அதை கூட செய்திட நீங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் காலையிலிருந்து எங்கு பேசினாலும் எடப்பாடி பழனிச்சாமியை வசைபாடுவதே வாடிக்கையா வைத்துள்ளார்கள்.
அண்ணாமலை மதுரையில் வந்து அதிமுகவை வசை பாடுகிறார். இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன அதிமுக பொதுச்செயலாளர் நீங்கள் தொடர்ந்து விமர்சனம் செய்வதால் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கப் போவது என்ன, நாங்கள் நாணயம் வெளியிடும் விழாவை விமர்சனம் செய்ததாக தவறுதலாக கூறுகிறார்கள்.
அண்ணாமலையை தமிழ்நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர் பேச்சு வெறும் பேச்சு, வெட்டிப் பேச்சு, வீண் பேச்சு, வீனர்கள் பேச்சு என்று, இதில் அவர் நேரத்தையும், ஆற்றலையும், தொண்டர்களின் உழைப்பையும் வீணடிப்பதை தவிர்த்து ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள், திட்டங்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது, முதலமைச்சர் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளார், அதை நீங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறச் செய்யாததால் எங்களை தமிழ்நாட்டு மக்கள் எங்களை புறக்கணிக்கிறார்கள் ஆகவே தமிழ்நாடு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி தாருங்கள் என்று தனது திறமையை பயன்படுத்தி செல்வாக்கை பயன்படுத்தி தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி, மெட்ரோ ரயில் நிதி, ரத்து செய்யப்பட்ட ரயில் திட்டங்கள், வளர்ச்சி நிதி, 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி நிலுவை பாக்கி இதை எல்லாம் பெற்றுக் கொடுத்தால் தமிழ்நாட்டு மக்கள் உங்களுடைய பேச்சுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்று நினைப்பார்கள்.
இப்போது நீங்கள் பேசுவது உங்களுக்கும் புரியவில்லை, எங்களுக்கும் புரியவில்லை, தமிழ்நாடு மக்களுக்கும் புரியவில்லை. ஓங்கி பேசினால் உண்மை என்று சொல்வது போல மூச்சு விடாமல் ஓங்கி பேசுகின்ற அண்ணாமலை உங்கள் பேச்சு வெறும் பேச்சு, வெட்டிப் பேச்சா இருக்கிறதே தவிர உங்கள் பேச்சு காகித பூவா தான் காட்சியளிக்கிறதே தவிர அது மனம் பரப்புகிற மல்லிகைப்பூவாக மதுரையில் இல்லை. உங்கள் பேச்சினால் இந்த மதுரை மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை, வெறும் பொழுது போக்காக மட்டுமே, நகைச்சுவையாக தான் அதை கடந்து சென்று இருக்கிறார்கள்.
நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு
நடிகர் விஜய் கட்சி துவங்கியுள்ளதற்கு நாங்கள் வாழ்த்துகிறோம், அரசியல் நாகரித்துடன் நாங்கள் வரவேற்கிறோம். எந்த அரசியல் புலமும் இல்லாமல் மன உறுதியோடு அவர் கட்சியை துவங்கியுள்ளார், அந்த தைரியமே பாராட்டக்கூடியது. அதிமுகவின் தலைவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தனது கட்சியை துவக்கி உள்ளதாக தெரிகிறது. எதுவாகினும் யாராகினும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்கிறேன் என்று யார் சொன்னாலும் அவரை அதிமுக சிவப்பு கம்பளம் விரித்து அவர்களை வரவேற்போம்
எய்ம்ஸ் மருத்துவமனை குறி குறித்த கேள்விக்கு
எய்ம்ஸ் அடிக்கல்நாட்டு விழா மதுரையில் நடக்கும்போது அண்ணாமலை கட்சியில் இருந்தாரா என்பது தெரியவில்லை. அவருக்கு இது பற்றி தெரிய வாய்ப்பில்லை தற்போது அந்த சத்தம் போட்டு மூச்சு விடாமல் பேசி மக்கள் திசை திருப்பி ஆதாயம் தேடலாமா என நினைக்கிறார். எனக்கு தெரிந்து அண்ணாமலை பாஜாக கட்சியை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு போறேன் என்று கூறிவிட்டு அண்ணாமலை அவரது முகத்தை கொண்டு செல்லும் வழியில் தான் அவர் தொண்டர்கள் உழைப்பை செலவழிப்பதாக தெரிகிறது. அவர் வேண்டுமானால் அண்ணாமலை தெரியுமா தெரியாதா என்று விசாரித்துக் கொள்ளலாம் என்றார்.