in

பிரஜ்வல் ரேவண்ணா கைது வழக்கில் குறித்து அண்ணாமலை மலுப்பல் பதில்


Watch – YouTube Click

பிரஜ்வல் ரேவண்ணா கைது வழக்கில் குறித்து அண்ணாமலை மலுப்பல் பதில்

 

நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா கைது? குறித்து அண்ணாமலை மலுப்பல் பதில், கோவிலில் பேசுகிற விஷயமா இது என செய்தியாளர்களை சமாளித்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பல்வேறு ஆலயங்களில் தரிசனம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் தரிசனம் செய்த அண்ணாமலை நாகை தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் முடிவு குறித்து கலந்துரையாடினார்.

பின்னர் ஆலயத்தின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களை கண்டதும் பெரிய வணக்கம் வைத்து செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து சென்றார்.

அப்போது நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் தேவே கௌடவின் பேரனும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு கோவிலில் பேசும் விஷயமா இது என சமாளித்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.


Watch – YouTube Click

What do you think?

ராமேஸ்வரம் அருகே வில்லுண்டி தீர்த்த கிணறு தடுப்புகள் சேதம்

சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை