32 ஆண்டுகளை நிறைவு செய்த அண்ணாமலை படம்
1992 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஜோடியாக குஷ்பூ நடித்த அண்ணாமலை படம் வெளியாகிய 32 ஆண்டுகள் நிறைவுற்றதை மகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் தலத்தில் பதிவு செய்துள்ளார் குஷ்பூ.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான அண்ணாமலை படம் 56 திரையரங்குகளில் 50 நாளும் 30 அரங்குகளில் 100 நாட்களும், முதன்முறையாக 9 நாடுகளில் 25 நாட்களை கடந்து வெள்ளி விழா கொண்டாடிய படம் (இவங்க கொடுத்திருக்கிற புள்ளி விவரம் Correct…டா தெரியலையே) அன்று ஆட்சியில் இருந்த ஆளுங்கட்சியின் தடைகளை மீறி 61 ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் படைத்த படம் என்ற பெருமை அண்ணாமலைக்கு உண்டு.
அண்ணாமலை படம் 32 ஆண்டுகளை நிறைவு செய்திருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் பதிவிடுகிறேன்.