in

ஆனித் திருமஞ்சன விழாவினையொட்டி ஜய்யங்குள தீர்த்தத்தில் தீர்த்தவாரி மேற்கொண்ட அண்ணாமலையார்

ஆனித் திருமஞ்சன விழாவினையொட்டி ஜய்யங்குள தீர்த்தத்தில் தீர்த்தவாரி மேற்கொண்ட அண்ணாமலையார்

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கக்கூடிய பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோவிலின் ஆனித் திருமஞ்சன விழா கடந்த 7ஆம் தேதி அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றி தொடர் தொடங்கி 10 நாட்கள் காலையில் மற்றும் மாலையில் சந்திரசேகர் மற்றும் விநாயகர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தனர். ஆனித் திருமஞ்சன விழாவில் நிறைவு நாளான இன்று உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அண்ணாமலையார் திருக்கோவில் இருந்து உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் புறப்பட்டு ஜய்யங்குளத்தினை சென்றடைந்தனர்.

பின்னர் அங்கு ஜய்யங்குளத்தில் சிவசாச்சரியார்கள் வேதமந்திரம் முழங்க அண்ணாமலையார் சூலத்துடன் 3 முறை குளத்தில் முழுகி தீர்த்தவாரி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அண்ணாமலையார் சூலத்திற்கு பால்,தயிர். சந்தனம்,மஞ்சள், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று தீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாட்டனர்.

What do you think?

வாயில் எலியை கவ்வியபடி பயணிகளை மிரட்டிய வாலிபர். வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை…