in

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் புதியதாக புனரமைக்கப்பட்ட மரத்தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாட வீதியில் வெள்ளோட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் 70 லட்சம் மதிப்பில் புதியதாக புனரமைக்கப்பட்ட மரத்தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாட வீதியில் வெள்ளோட்டம்….

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமல அம்மனுக்கு அரோகரா என பக்தி முடக்கப்பட்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்…

நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மழையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கருதக்கூடிய தேரோட்டம் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

குறிப்பாக அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் அமர்ந்து மாட வீதியில் வலம் வரக்கூடிய 59 அடி உயரமும் 200 டன் எடையும் கொண்ட மரத்தேர் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் சார்பில் சுமார் 70 லட்சம் மதிப்பீட்டில் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது.

203 மர சிற்பங்கள், புதியதாக 4 நிலைகள் புதுப்பிக்கப்பட்டது. தேவாசனம் நராசனம் சிம்மாசனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரப்பலகைகள் மற்றும் பழுதடைந்த சிலைகள் புதுப்பிக்கப்பட்டன. புதிய துவார பாலகர்கள், பிரம்மா சிலைகள் புதியதாக செய்யப்பட்டு இன்று காலை வெள்ளோட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்ததுடன் ஆன்மீக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் இன்று காலை மரத்தேர் வெள்ளோட்டத்திற்காக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடைபெற்று பின்னர் பூர்ணாஹூதியம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

யாக கலசத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மரதேரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து புனித நீர் மரத்தேருக்கு தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மருத்துவர் எ.வ.வே.கம்பன், மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் உள்ளிட்ட நகரின் முக்கியஸ்தர்களும் ஆன்மீக பக்தர்களும் விண்ணதிர அண்ணாமலைக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

தொடர்ந்து மாடவீதியில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் அமர்ந்து செல்லக்கூடிய புனரமைக்கப்பட்ட மரத்தேர் ஆடி அசைந்தவாறு மக்கள் வெள்ளத்தில் நீந்தி செல்கிறது.

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 08.11.2024

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி