in

7 ஆண்டாக கோயில் திருவிழா நடத்த தடை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு


Watch – YouTube Click

7 ஆண்டாக கோயில் திருவிழா நடத்த தடை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது நடுக்குப்பம் ஊராட்சி. இப்பகுதியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலுக்கு இங்குள்ள அனைத்து பொதுமக்கள் சார்பில் 10 நாட்கள் திருவிழா நடத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுக்கு முன் இக்கோயில் திருவிழா நடத்துவதின் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் இது தரப்பினருக்கும் பிரச்சனை உண்டாகாமல் இருக்க கோவில் திருவிழாவை நடத்தக்கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறை சார்பில் தடை விதித்துள்ளனர்.

இதன் காரணமாக இதுவரையில் இப்பகுதி பொது மக்களால் திருவிழா நடத்த முடியவில்லை நேற்று காலையில் நடுக்குப்பம் ஊர் தரப்பை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோயில் வளாகத்தில் ஒன்று திரண்டனர்.

இவர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கோவில் திருவிழாவை நடத்த விடாமல் அரசு அதிகாரிகள் தான் தடை விதித்து வருகின்றனர்.

எனவே இந்த ஆண்டு வழக்கம்போல் கோயில் திருவிழாவை நடத்த அதிகாரிகள் தடையை நீக்க வேண்டும். இந்த கிராமத்திற்கு அரசு அதிகாரிகள் சார்பில் விதிக்கப்பட்டுள்ள 107 தடை உத்தரவை உடனடியாக நீக்காவிட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலில் தேர்தலை புறக்கணிப்பது.

இதுபோல் வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை திரும்ப அரசிடமே ஒப்படைப்பது எனக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் காரணமாக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

உலக நாடுகள் ஆச்சர்யப்படும் வகையில், டிஜிட்டல் பொருளாதாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி

ஆழித் தேரோட்டம் – மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு