in ,

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நான்காம் நாள் கற்பக விருட்ச வாகன புறப்பாடு

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நான்காம் நாள் கற்பக விருட்ச வாகன புறப்பாடு

 

காலை மணி 8 முதல் 10 வரை கற்பக விருட்ச வாகன புறப்பாடு.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் ஆன இன்று காலை எட்டு மணிக்கு துவங்கி 10 மணி வரை திருமலை கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் கற்பக விருட்ச வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.

வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருந்து பல்லக்கில் எழுந்தருளி வாகன மண்டபத்தை அடைந்தார்.

அங்கு தங்க கற்பக விருட்ஷ வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் கற்பக விருட்ச வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது மாட வீதிகளின் இருபுறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் கற்பக விருட்ச வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

கேட்டவர்களுக்கு கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சத்தை வாகனமாக கொண்டு கேட்காதவர்களுக்கும் அவர்களின் தேவை அறிந்து வாரி வழங்கும் ஏழுமலையானின் கற்பக விருட்ச வாகன புறப்பாட்டை கண்டு வழிபட அதிக அளவிலான பக்தர்கள் மாட வீதிகளில் குவிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

What do you think?

இன்னும் 24 மணி நேரத்திலேயே முதல் எவிக்க்ஷன்…. சாச்சனா நேமிதாஸ்…வெளியேறுகிறாரா?

பெண் குழந்தைகளுக்கு கற்பிப்பதும் பாதுகாப்பதும் குறித்த விழிப்புணர்வு பேரணி