in

அருள்மிகு சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் திருக்கோவிலில் வருஷாபிஷேகம்

அருள்மிகு சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் திருக்கோவிலில் வருஷாபிஷேகம்

 

அருள்மிகு சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் திருக்கோவிலில் வருஷாபிஷேகமும் மாசி பெருந்திருவிழாவின் தீர்த்தவாரியும் விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தென் தமிழகத்தில் பழமையும் பிரசித்தியும் பெற்ற சிவாலயங்கள் அனேகம் உண்டு. அதில் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள கோடகநல்லூர் என்னும் அழகிய கிராமம் தாம்பரபரணி நநிக்கரையில் அமைந்துள்ளது.

இங்கு இரண்டு சிவன் கோவில்களும், ஒரு பெருமாள் கோவிலும், நங்கையார் அம்மன் என்னும் காவல் தெய்வமும் உள்ளது. இதில் சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் ஆலயம் சுமார் 900 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட ஆலயம். இங்குள்ள சிவலிங்கம் மேற்கு திசையை நோக்கி இருப்பது விசேஷம். மேலும் உட்கார்ந்த கோலத்தில் அர்த்தநாரீஸ்வர் காட்சி தருவது விசேஷமாகும்.

மூலஸ்தானத்தின் வெளிப்புற சுவரின் வடக்குப் பாகத்தில் வாலி சிவனுக்கு பூஜை செய்வதாகவும், கண்ணப்ப நாயனார். தனது இரண்டாவது கண்ணை அம்பினால் எடுப்பதாகவும் இரண்டு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

இது இக்கோயிலின் பழமையை பறைசாற்றுகின்றன. சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கோயிலில் இந்த ஆண்டு மாசி பெருந்திருவிழாவின் தீர்த்தவாரியும், வருஷாபிஷேகமும் ஒன்றாக நடைபெற்றது. கடந்த 12ஆம் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தீர்த்தவாரி உற்சவத்தை ஒட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி அபிமுக்தீஸ்வரர் சௌந்தரநாயகி அம்பாள் பஞ்சவர்ணசப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலாவாக தாமிரபரணி நதிக்கரைக்கு எழுந்தருளினர் அங்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அஸ்திரதேவருக்கு தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு வருஷதபிஷேக தினமான இன்று ஹோமங்கள் நடைபெற்று கலசங்கள் எடுத்து வரப்பட்டு விமானம் மூலஸ்தானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னா் அருள்மிகு சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

What do you think?

திருவிழந்தூர் மகாகாளியம்மன் ஆலய 151 வது ஆண்டு தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் நேரில் ஆய்வு