in

நிஜாமாபாத் நகராட்சி கண்காணிப்பாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

நிஜாமாபாத் நகராட்சி கண்காணிப்பாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

நிஜாமாபாத் நகராட்சி கண்காணிப்பாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.

ரூ.2.93 கோடி ரொக்கம், நகைகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல்.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகராட்சி கண்காணிப்பாளர் தாசரி நரேந்தர் மீது பதிவு செய்யப்பட்ட வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் ஒரு பகுதியாக, அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவருடைய வீட்டில் இருந்த ரூ. 2.93 கோடி ரொக்கம் அவரது மனைவி, தாயார் ஆகியோரின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.1.10 கோடி ரூபாய் இருப்பு,
51 சவரன் தங்கம் மற்றும் 17 அசையா சொத்துக்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.6.07 கோடி ஆகும்.

தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

திருப்பதி மலையில் கருட பஞ்சமி வருட வாகன புறப்பாடு

அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை அபகரித்து சென்ற திருடன்