in

திருத்துறைப்பூண்டியில் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

திருத்துறைப்பூண்டியில் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

 

திருத்துறைப்பூண்டியில் காவல்துறையினர் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

போதை பொருள் அற்ற தமிழ்நாடு” என்ற நோக்கத்தை எட்டுவதற்காக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இன்று காவல்துறை சார்பில் கல்லூரி மாணவர்கள் இணைந்து போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி சோமசுந்தரம் பழைய பேருந்து நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பழைய காய்கறி மார்க்கெட், என நகரின் முக்கிய வீதிகள் வழியாக காவல்துறையினர் மாணவர்கள் போதை பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

தொடர்ந்து பேரணி புதிய பேருந்து நிலையம் சென்றடைந்த பின்னர் அங்கு போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .

இந்த விழிப்புணர்வு பேரணியில் காவல்துறையினர் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

What do you think?

திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதிமொழி வாசிக்க 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

வேன் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து- பட்டாசு தொழிலாளர்கள் 15 பேர் காயம்