in

எங்கள் கட்சியில் யார் வேண்டுமானாலும் வரலாம் யார் வேண்டுமானாலும் செல்லலாம் மதுரை விமான நிலையத்தில் சீமான் பேட்டி

எங்கள் கட்சியில் யார் வேண்டுமானாலும் வரலாம் யார் வேண்டுமானாலும் செல்லலாம் முழு சுதந்திரம் உள்ளது – காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவலுக்கு மதுரை விமான நிலையத்தில் சீமான்

பழனி செல்வதற்காக சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தனியார் பள்ளிகளில் இந்தி இருப்பதாக அண்ணாமலை சொல்கிறார் அதற்கு அனுமதி கொடுப்பது யார் மத்திய அரசுதானே.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஆரம்பத்தில் இருந்து ஹிந்தி பாடம் நடத்தப்பட்டு வருகிறது. அதை ஆரம்பத்திலேயே எதிர்த்திருக்கலாம் ஆனால் அப்போது எதிர்க்காமல் தேர்தல் வருவதால் தற்போது இதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.தொடர்ந்து பேசிய சீமான் இந்தி தான் இந்தியாவின் மொழி என்றால் என்னுடைய மொழி என்ன ஆயிற்று
பாகிஸ்தான், பங்களாதேஷ் பிரிந்ததற்கு காரணம் மொழிபிரச்சனை தான்

மும்மொழி கொள்கையால் தமிழ் படிப்பதற்கு வாய்ப்பில்லை என்ற சூழல் வரும் போது எம் மொழி என்னவாகும் என கேள்வி எழுப்பிய சீமான்

அந்தந்த மாநில மொழிக்கு முன்னுரிமை கொடுத்தால் தான் மாநிலம் வளர்ச்சி பெறும் இல்லம் தேடி கல்வி திட்டம் புதிய கல்விக் கொள்கை திட்டத்தில் தான் வருகிறது என்றார்.

தொடர்ந்து நாம் தமிழர் கட்சி பெண்கள் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக அந்த தகவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கட்சியில் இருக்க விருப்பம் இல்லை என்றால் அவர்கள் விலகுவதற்கு முழு சுதந்திரம் உள்ளது.காளியம்மாள் கட்சியில் இணைத்தது நான் தான் …கட்சியிலிருந்து விலகுவதற்கு முழு சுதந்திரம் உள்ளது. இலையுதிர் காலம் என்பதால் கிளைகள் உதிரத்தான் செய்யும்.இந்த கட்சியிலிருந்து யார் வேண்டுமானாலும் விலகலாம் விருப்பப்பட்டவர்கள் கட்சிக்கு வரலாம் என தெரிவித்தார்.

போர் குணம் மிக்க ஒரு இனம் உள்ளது என்றால் அது தமிழினம் தான் . அந்த காலத்தில் இருந்து மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து போராடுபவர்கள் தமிழ் இனம்தான்…..

விளம்பர பலகைகள் கூட ஆங்கிலத்தில் வைத்து எங்களது மொழியை அழித்து விட்டீர்கள்

சமஸ்கிருதம் பேசுபவர்கள் குறைந்தவர்கள்தான். ஆனால் பாராளுமன்றத்தில் சமஸ்கிருத மொழியில் கல்வெட்டு வைக்கிறார்கள்.மொழியை வைத்து பிரிப்பவர்கள் நாங்களா? நீங்களா? என மோடிக்கு கேள்வி எழுப்பிய சீமான் என்னுடைய வளம் எல்லாருக்கும் ஆனால் நீர்வளம் அவரவருக்கு மட்டும்தானா?

நாம் தமிழர் கட்சியினர் மிரட்டியதால்தான் வழக்கை வாபஸ் பெற்றதாக விஜயலட்சுமி கூறியதற்கு கேள்விக்கு

இது தொடர்பாக நான் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.

தமிழக முதல்வர் நாங்கள் நிதி வழங்குவதை நிறுத்த ஒரு நொடி போதும் என பேசியுள்ளார்.

அந்த நொடி எந்த நொடி என சீமான் கேள்வி மாநில நிதி தான் மத்தியரசுக்கான நிதி. ஆனால் அதையே திரும்பதர மறுக்கிறார்கள் என தெரிவித்தார்

What do you think?

GETOUT ஸ்டாலின் என விளக்கேற்றி கைகளில் பதாகைகளோடு முழக்கமிட்ட பாஜகவினர்

ஸ்ரீ ருக்குமணி சத்யபாமா சமேத ஸ்ரீ இராஜகோபால ஸ்வாமி தெப்ப உற்சவம்