புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் திடீரென இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இருந்து அனூப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகிய 2 பேரும் தேர்தல் ஆணையாளர்கள் பதவியில் இருந்து விலகினார்.
இதன் காரணமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில், இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கான பணியிடங்கள் காலியாகி உள்ளது. இந்த சூழல் தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேர்தல் ஆணையர்கள் தேர்வு கூட்டம் ஒருதலைபட்சமாக நடந்ததாக கூட்டத்தில் பங்கேற்ற பின் அதிரஞ்சன் சவுத்ரி குற்றசாட்டியுள்ளார்.