மயிலாடுதுறையில் பத்தாம் பகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா
மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் பகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கும், அரசு பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சி வழங்கிய தலைமையாசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுத் தேர்வுகளில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் நிகழ்ச்சியில் பேசிய அவர், பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் இவ்வாண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 5744 மாணவர்களும் 5805 மாணவிகளுமாக 11,549 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 4975 மாணவர்களும் 5474 மாணவிகளுமாக 10,449 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாண்டு தேர்ச்சி விழுக்காடு 90.48% கடந்த ஆண்டு தேர்ச்சி விழுக்காடு 86.31% கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு 4.17% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மாநில அளவில் மயிலாடுதுறை மாவட்டம் பெற்ற தரவரிசை – 37. இவ்வாண்டு தரவரிசை – 27. கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு 10 இடங்கள் முன்னேற்றம் பெற்றுள்ளது.
இந்தாண்டு நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தி,மாநில அளவில் முதலிடம் பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,மாணவர்கள் பள்ளிக்கு தினசரி வருகையை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
தினசரி பாடங்களை அன்றைக்கே நிறைவு செய்ய மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களை ஊக்குவித்து அவர்களை கற்றல் திறனை வளர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி வழங்கிய மயிலாடுதுறை மாவட்ட 9 அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், மயிலாடுதுறை செயின்ட்பால்ஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருவெண்காடு எஸ்.எஸ்.டி.மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆகிய 2 அரசு உதவிபெறும் தலைமையாசிரியர்களுக்கும், அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 35 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.